.

Saturday, June 25, 2016

சொத்தை பல், ஈறு நோய்கள் மற்றும் மஞ்சள் பற்களைப் போக்கும் ஆயுர்வேத டூத் பேஸ்ட்



என்ன தான் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள், சொத்தைப் பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு கடைகளில் ஏராளமான டூத் பேஸ்ட்கள் விற்கப்பட்டாலும், அவற்றால் உண்மையில் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது.
ஆகவே பலரும் தங்கள் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயற்கை வழிகளை நாடுகின்றனர்.

தற்போது நிறைய பேர் தங்களின் உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் இயற்கை வழிகளை தேடி வருகின்றனர். அப்படி நம் வாயில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்க வேப்பிலை ஓர் சிறந்த பொருளாகும். மேலும் ஆயுர்வேதத்திலும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வேப்பிலை தான் பரிந்துரைக்கப்படுகிறது.

இங்கு ஓர் அற்புதமான நேச்சுரல் டூத் பேஸ்ட்டை வீட்டிலேயே எப்படி தயாரிப்பதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கி வந்தால், வாயில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கலாம்.

தேங்காய் எண்ணெய் 

தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ், பூஞ்சை போன்றவற்றை அழிக்கப்படும்.

பேக்கிங் சோடா 

பேக்கிங் சோடாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், பற்களில் உள்ள கறைகள் வேகமாக நீக்கப்படும்.

வேப்பிலை பவுடர் 

வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை மட்டுமின்றி, இன்னும் ஏராளமாக சக்தி வாய்ந்த உட்பொருட்கள் உள்ளது. இதனைக் கொண்டு ஒருவர் டூத் பேஸ்ட் செய்தால், வாயின் ஆரோக்கியம் மேம்படும்.

புதினா எண்ணெய் 

இந்த நேச்சுரல் டூத் பேஸ்ட்டில் புதினா எண்ணெய் சேர்ப்பதற்கு காரணம், அது வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும்.

டூத் பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்: 

தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 3 டேபிள் ஸ்பூன்
ஜிலிடால் - 1 டேபிள் ஸ்பூன்
வேப்பிலைப் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
புதினா எண்ணெய் - 15 துளிகள்

தயாரிக்கும் முறை: 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கிளறி விட வேண்டும். பின் அதனை ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.


குறிப்பு

 இந்த டூத் பேஸ்ட்டைக் கொண்டு தினமும் மூன்று வேளை பற்களைத் துலக்கி வந்தால், பல் மற்றும் ஈறு பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட முடியும்.

Disqus Comments