.

Friday, March 4, 2016

பட்டுப்போன்ற நீளமான கூந்தல் வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்!!



தலை முடி பிரச்சனை என்பது காலம் காலமாக உள்ள பிரச்சனை. அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க, அழுத்தம் கூட கூட, கூந்தல் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பே.
கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பெண்கள் பல வழிகளை தேடி ஓய்ந்து போகிறார்கள். முடி உதிர்தலை தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பல நுட்பங்களும் தொழில் நுட்பவியலும் வந்து விட்டது. ஆனால் அப்படிப்பட்ட இரசாயன பொருட்களைப் பயன்படுத்தி, கூந்தலின் தரத்தை ஏன் இழக்க வேண்டும். அதிலும் முக்கியமாக திருமணம் ஆகும் நேரத்தில் தீமை விளைவிக்கும் இரசாயன பொருட்களை பயன்படுத்தினால், கூந்தல் கலை இழந்து ஜீவன் இல்லாமல் போய் விடும். அதனால் தான் கூந்தலை பாதுகாக்கவும், கூந்தல் வளர்ச்சி அடையவும் சக்தி வாய்ந்த 15 இயற்கை வழிகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி, நன்மையைப் பெறுங்கள்.

முட்டை மாஸ்க் 

முட்டையில் புரதம், செலீனியம், பாஸ்பரஸ், ஜிங்க், இரும்பு, சல்பர் மற்றும் அயோடின் சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால், முடி உதிர்தலுக்கு எதிராக சண்டையிடவும், கூந்தலை பராமரிக்கவும் இது பெரிதும் உதவுகிறது. கூந்தலை அடர்த்தியாக்கவும் முட்டை பெரிதும் உதவும். அதிலும் இதனுடன் சேர்த்து கொஞ்சம் ஆலிவ் எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம். பயன்படுத்தும் முறை: முட்டையின் வெள்ளை கருவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனை கலந்து ஒரு பேஸ்ட்டை தயார்படுத்தி, அதனை தலையில் சரிசமமாக தடவி, ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் கூந்தலை ஷாம்பு போட்டு அலசவும். இதனால் வறண்ட பாதிப்படைந்த கூந்தலை திடமாக்க ஆலிவ் எண்ணெய் உதவி புரியும்.

உருளைக்கிழங்கு ஜூஸ் 

முடி உதிர்தலை தடுக்கவும், கூந்தல் வளர்ச்சி அடையவும் உருளைக்கிழங்கு ஜூஸ் பெரிதும் உதவி புரியும் என்ற விஷயம் பல பேருக்கு தெரியாத சிகிச்சையாகும். கூந்தல் வளர்ச்சி இயற்கையான முறையில் இருக்க வேண்டுமா? அப்படியானால் உருளைக்கிழங்கு ஜூஸைப் பயன்படுத்துங்கள். பயன்படுத்தும் முறை: உருளைக்கிழங்கு ஜூஸை தலை சருமத்தில் தேய்த்து, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். இதனால் உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி, கூந்தலை நீளமாகவும் திடமாகவும் வளரச் செய்யும்.

மருதாணி

கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக திகழ்கிறது மருதாணி. நரைத்த மற்றும் கலை இழந்த கூந்தலை பளபளக்க வைக்க மருதாணி உதவுவதால், இதனை 'கூந்தல் இரசவாதி' என்றும் அழைப்பதுண்டு. மேலும் இது முடியின் வேர் வரை சென்று, முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பயன்படுத்தும் முறை: ஒரு கப் மருதாணி பவுடருடன் அரை கப் தயிரை கலந்து சில மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் அந்த கலவையை தலை சருமத்தில் தேய்க்கவும். அது காயும் வரை காத்திருந்து, பின் கூந்தலை அலசவும்.

தேங்காய் பால் 

தேங்காய் பாலில் புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் அதி முக்கிய கொழுப்புகள் வளமையாக உள்ளதால், முடி உதிர்வதையும் உடைவதையும் இது தடுக்கும். பயன்படுத்தும் முறை: தேங்காய் பாலை ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமையாக உள்ளதால், அது கூந்தல் பிரச்சனைகளுக்கு எதிராக போராடும். மேலும் இதில் பாலிஃபீனால்கள் மற்றும் அழற்சி விளைவிப்பதை தடுக்கும் ஆற்றல் உள்ளதால், கூந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பயன்படுத்தும் முறை: இரண்டு க்ரீன் டீ பையை எடுத்து, ஒரு கப் வெந்நீரில் போட்டு விடவும். இந்த கலவையை தலை சருமத்தில் தடவவும். மேலும் தினமும் க்ரீன் டீயை பருகினாலும் முடி உதிர்தலை தடுக்கலாம்.

நெல்லிக்காய் 

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளதால், இது முடி வளர்ச்சிக்கு உதவி, பொடுகுத் தொல்லையைப் போக்கும். பயன்படுத்தும் முறை: நெல்லிக்காய் பவுடர் மற்றும் எலுமிச்சை சாற்றை சரிசமமாக கலந்து, இந்த கலவையை தலையில் தடவவும். அது காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுங்கள். மேலும் சீரான முறையில் நெல்லிக்காய் எண்ணெயை தடவினால், கூந்தல் கரு கருவென்று திடமாக வளரும்.

திராட்சை கொட்டை எண்ணெய் (Grapeseed Oil) 

இந்த எண்ணெய் முடி சுரப்பிகளை ஊக்குவித்து மீண்டும் முடி வளர துணை புரியும். அதிலும் சுருட்டை முடி உடையவர்களுக்கு, இந்த எண்ணெய் பெரிதும் உதவி புரியும். பயன்படுத்தும் முறை: இரவு தூங்கும் முன் உங்கள் தலையில் இந்த எண்ணெயைத் தேய்த்து, மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து கூந்தலை அலசவும்.

கற்றாழை மற்றும் தேன் 

கற்றாழையில் வைட்டமின் ஏ, பி, ஈ, செலீனியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது. தலை சருமத்தை சுத்தப்படுத்தி, பொடுகை நீக்க இது உதவும். அதனால் இது கூந்தலுக்கு மிகவும் நல்லது. பயன்படுத்தும் முறை: இரவு தூங்கச் செல்லும் முன் கற்றாழை ஜெல்லை தலையில் தடவிக் கொள்ளுங்கள். மறுநாள் காலை அதை கழுவிக் கொள்ளலாம். சிறிது கற்றாழை ஜெல்லை தேனுடன் சரிசமமாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலை சருமத்தில் தடவி, ஒரு 30 நிமிடம் வரை ஊற வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசுங்கள்.

ஓட்ஸ் 

ஓட்ஸ் என்பது முடிக்கான இயற்கை மாய்ஸ்சுரைசராகும். அது தலை முடியை வழவழப்பாகவும், திடமாகவும் ஆக்குவதோடு மட்டும் இல்லாமல், பொடுகையும் நீக்கும். பயன்படுத்தும் முறை: அரை கப் ஓட்ஸை, 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் கால் கப் பால் ஊற்றி கலக்கவும். இந்த கலவையை முடியின் வேரிலிருந்து நுனி வரை தடவுங்கள். ஒரு 20 நிமிடம் வரை ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசுங்கள். இந்த கலவையை தடவும் முன், முடியானது சிக்கல் இல்லாமலும் வறட்சியுடன் இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

வெங்காய ஜூஸ் 

வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளது. இது கொலாஜென் திசுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அதனால் மறுபடியும் முடி வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் வெங்காயம் இரத்த ஓட்டத்தை தூண்டும். அதுமட்டுமின்றி தலை சருமத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும். பயன்படுத்தும் முறை: வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, அதிலிருந்து சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி, ஷாம்பு தேய்க்கும் முன்னதாக ஒரு 30-45 நிமிடம் வரை ஊற வைக்கவும். வெங்காயத்தில் எரிச்சலூட்டும் வாசனை வருவதால், அதனுடன் பன்னீர் அல்லது தேனை சிறிதளவு கலந்து கொள்ளுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் 

வினிகர் தலை முடியில் உள்ள அமில காரச் சமன்பாட்டை திருப்பி கொண்டு வர உதவும். அமில காரச் சமன்பாடு திரும்பப் பெற்று பராமரிக்கப்படுவதால், தலை முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் முடியை பளபளப்பாகவும், திடமாகவும் வைக்கும். குறிப்பாக இரசாயன பொருட்களை முடிக்கு பயன்படுத்துவதால், முடியில் பதிந்திருக்கும் இரசாயனங்களையும் நீக்கும்.

எலுமிச்சை சாறு 

வினிகரை போல எலுமிச்சை சாறும் தலை முடியில் உள்ள அமிலகாரச் சமன்பாட்டை திருப்பி கொண்டு வர உதவும். பயன்படுத்தும் முறை: கை நிறைய பாதாமை எடுத்து தண்ணீரில் இரவு ஊற வையுங்கள். மறுநாள் காலை அதன் தோலை நீக்கி அதனை அறைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, தலையில் மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தலை முடியை அலசுங்கள்.

சரியாக சாப்பிட்டு மன அழுத்தத்தை குறைக்கவும் 

பழங்கள், காய்கறிகள், கறி மற்றும் மீன்களை அதிகமாக உண்ணுங்கள். சரியான கொழுப்பு நிறைந்த உணவை உண்ணுங்கள். எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். போதுமான அளவு இரும்பு, ஜிங்க் மற்றும் வைட்டமின் சி உள்ள உணவுகளை உண்ணுங்கள். ஏனெனில் கூந்தல் பிரச்சனைக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். அதனால் மன அழுத்தத்தை தவிர்க்கவும். நேரம் கிடைக்கும் போது நற்பதமான காற்றை உள்வாங்குங்கள். சில உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். போதுமான அளவு தூக்கத்தை பெற்று ஆரோக்கியமான வாழ்வை பெற்றிடுங்கள்.
Disqus Comments