.

Tuesday, March 15, 2016

சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்



சிறுநீரக கற்கள் கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் கனிமங்களினால் உருவாகுபவை. சிறுநீரக கற்கள் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களினாலும், பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் வரக்கூடும். சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலியை சந்திக்க நேரிடும். சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் சில பானங்களை பார்க்கலாம்..


* துளசி டீ அல்லது ஜூஸ் சிறுநீரகங்களுக்கு நல்லது. இது சிறுநீரகங்களை சுத்தம் செய்து, வலிமைப்படுத்தும். மேலும் துளசி இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும். துளசியில் அசிட்டிக் அமிலம் உள்ளதால் இது சிறுநீரக கற்களை உடைத்தெரியும். துளசி டீயை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்களினால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* மாதுளையை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து கூட குடிக்கலாம். இதனால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும். மேலும் மாதுளை சிறுநீரில் உள்ள அசிடிட்டியின் அளவைக் குறைக்கும் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும்.

* சிறுநீரக கல் உள்ளவர்கள், ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடித்து வர, சிறுநீரக கற்கள் கரைத்துவிடும். இந்த கலவையை சிறுநீரக கற்கள் வெளியேறிய பின்னரும் குடித்து வர வேண்டும். இதனால் மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

* ஆப்பிள் ஜூஸை தினமும் குடித்து வருவதன் மூலம் சிறுநீரக கற்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் யார் தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வருகிறார்களோ, அவர்களுக்கு மற்றவர்களை விட சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும்.

* இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை உள்ளது. இதில் மக்னீசியத்தின் அளவும் அதிகம் உள்ளது. எனவே இதனை தினமும் குடித்து வந்தால், சிறுநீரக கற்களின் அளவு குறைந்து, சிறுநீரின் வழியே அவை வெளியேறிவிடும்.

* தர்பூசணியை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் செய்து குடித்தாலோ, இரண்டுமே சிறுநீரக கற்களைக் கரைத்து வெளியேற்றும். ஏனெனில் தர்பூசணியில் சிறுநீரில் உள்ள அமிலத்தின் அளவை சீராக பராமரிக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே தர்பூசணியை தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

* எலுமிச்சையில் சிட்ரேட் என்னும் உட்பொருள் உள்ளது. இது சிறுநீரக கற்களைக் கரைத்து, சிறுநீரின் வழியே வெளியேற்ற உதவும்.
Disqus Comments