.

Tuesday, February 2, 2016

தோசையை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?



தோசை சாப்பிடுவதிலும் சில நன்மைகள் இருக்கின்றன. ஆனால், தினமும் வெறும் அரிசி மாவு தோசையாக மட்டுமின்றி கம்பு, ராகி என வகை வகையான தோசைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. தோசைக்கு சேர்க்கப்படும் எண்ணெயை குறைத்துக் கொண்டீர்கள் எனில் தோசையும் இட்லியை போல ஓர் சிறந்த காலை உணவு தான்....


உடற்சக்திக்கு நமது உடலுக்கு கார்ப்ஸ் அவசியம் தேவைப்படுகிறது. தோசையில் இது கிடைக்கிறது. ஆனால் தோசையில் சேர்க்கப்படும் அதிகளவு எண்ணெய் உடலுக்கு நல்லதல்ல. தோசையில் இருந்து நமக்கு மினரல்ஸ் மற்றும் வைட்டமின்களும் கூட சிறிதளவு கிடைக்கிறது. தோசைக்கு சாம்பார் பயன்படுத்துவதன் மூலம் புரதம், வைட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் நிறையவே கிடைக்கின்றன.

தோசையில் கொழுப்பு குறைவு. இதை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் இதய நலனை பாதுகாக்கலாம். குறிப்பாக எண்ணெய்யை அதிகம் பயன்படுத்த கூடாது. தினமும் அரிசி தோசையை மட்டும் சாப்பிடுவதற்கு பதில் ராகி, கம்பு, சோளம், என எதை வேண்டுமானாலும் இதில் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம். ராகி, கம்பி போன்றவற்றை வெறுமென சாப்பிட விரும்பாதவர்கள் கூட தோசையில் கலந்து சாப்பிட விரும்புவார்கள். இதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உள்ளவர்கள், அரிசி மாவு தோசைக்கு பதிலாக ராகி, கம்பு, கோதுமை போன்றவற்றை கலந்து தோசை சாப்பிடலாம். இது உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். முட்டையை வேகவைத்து சாப்பிட பிடிக்காதவர்கள் முட்டை தோசை செய்து சாப்பிடலாம்.
Disqus Comments