.

Wednesday, January 6, 2016

குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்



குழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

குழந்தை தினமும் காலை எழுந்ததும் மெல்லிய மஸ்ஸின் துணியைத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை மெதுவாக சுத்தம் செய்துவிட வேண்டும். முடிந்தால் இரவு பால் குடித்ததும் இதே போல செய்து, தூங்க வைக்கலாம். ஒரு வயது வரை இதைத் தொடர வேண்டும்.

பால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் தருணங்களில் ஈறுகள் நமநமவென்று இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது சகஜம் தான். எனவே குழப்பம், அச்சமின்றி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

பற்கள் வளர ஆரம்பிக்கும் போது கேரட், ஆப்பிள் போன்றவற்றை துண்டுகளாக்கி கடித்து சாப்பிட பழக்க, அது பற்களை வலுவாக்கும்

1 வயதாகும்போது ப்ளூரைட் குறைந்த பற்பசையை உபயோகிக்க வேண்டும்

மேல் பற்கள், கீழ் பற்கள், கடைவாய் பற்கள், பற்களின் உள், வெளி சுற்றுப்பகுதி என்று அனைத்துப் பகுதிகளையும் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்த குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள்.
காலை, இரவு என்று முறை பல் துலக்குவதை பெரியவர்களும் கடைபிடித்து, குழந்தைக்கும் கற்றுக்கொடுங்கள்.

பற்களில் ஓட்டக்கூடிய இனிப்பு வகைகள் மற்றும் கேஸ் நிறைந்த சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குப் பழக்காமல் இருப்பதே நல்லது.

இவை பற்களில் படியும்போது, வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் இனிப்புகளைச் சிதைக்க ஆரம்பிக்கும்.

சாக்லேட், கூல் டிரிங்க்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள் என்றால், அவற்றை சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை கட்டாயமாக்குங்கள். நாக்கு சுத்தப்படுத்துவதும் மிக முக்கியமானது. நாக்கை தினம் ஒரு முறை ‘டங்க் க்ளீனர்’ கொண்டு மென்மையாக சுத்தப்படுத்துங்கள்.

குழந்தையை வருடம் ஒரு முறை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பற்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

விளையாடும் போது குழந்தைகள், பல்லை உடைத்துக் கொள்வது சகஜம்தான். அப்படியான சந்தர்ப்பங்களில் உடனே உடைந்த பல்லை எடுத்து பாலில் போட்டுவைத்து, தாமதிக்காமல் பல் மருத்துவரிடம் செல்லுங்கள். நிச்சயம் அந்த பல்லை உடைந்த பல்லோடு ஒட்ட வைத்துவிட முடியும். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும்

பல்லில் கறுப்பா ஏதாவது இருந்தால், அதுதான் பற்சொத்தைக்கான முதல் அறிகுறி. ஆரம்ப கட்டத்திலேயே சொத்தையை சுத்தம் செய்து, அந்தப் பகுதியை அடைத்துவிட வேண்டும்

Disqus Comments