குத்தை வைத்து (Squat) அமர்தல் என்பது இன்று நாம் கேலியாக கண்டாலும் கூட, முன்னோர்கள் இதை ஒரு ஆசனம் போன்று தான் பின்பற்றி வந்துள்ளனர். இது, குடல், வயிறு போன்ற உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை காக்கும் நிலை ஆகும். மேலும் இது மலம் கழிக்கும் போது எந்த சிரமும் இன்றி இலகுவாக கழியவும் பயனைளிக்கிறது...
ஆனால் தற்போது நாகரீகம் அடைந்துள்ள நம்நாட்டில் இவ்வாறு குத்தவைத்து செல்லும் பழக்கம் மறைந்து வருகிறது. அதற்கு காரணம் வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலி. வயதானால் வரும் இந்த பிரச்சனை, கால் மூட்டு பிரச்சனைகளை சமாளிக்க வெஸ்டர்ன் டாய்லெட் தற்போது அனைவரது வீடுகளிலும் வந்து விட்டது. வெஸ்டர்ன் டாய்லெட்’ வைத்திருக்கும் அத்தனை பேருமே, அதை உபயோகிக்கும் முறைபற்றி அறியாமல் இருந்தது அதிர்ச்சியே! வெஸ்டர்ன் டாய்லெட்’டில், மூன்று பகுதிகள் உண்டு.
கோப்பை, வளையம், தட்டு (மூடி). சிறுநீர் மட்டும் கழிப்பவர்கள், வளையம் மற்றும் தட்டு இரண்டையும் தூக்கிவிட்டுத் தான் சிறுநீர் கழிக்க வேண்டும். மூடியை மட்டும் தூக்கி சிறுநீர் கழித்தால், அடுத்து வருபவர் மலங்கழிக்க வளையத்தின் மேல் உட்காரும் போது, முந்தையவரின் சிதறிய சிறுநீர், பின்னவரின் உடலில் பட ஏதுவாகிறது. மலம் கழிப்பவர்கள், தட்டை மட்டும் தூக்கி, வளையத்தின் மேல் அமர வேண்டும் என்பது பலரும் அறிந்ததே. முதலில், “ப்ளஷ்’ செய்துவிட்டு, மலம் சென்ற பின், இறுதியில், மீண்டும், “ப்ளஷ்’ செய்ய வேண்டும். கோப்பை, எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்.
கோப்பையில் உள்ள நீரில், மலத் துகள்கள் மிதந்து கொண்டிருக்கக் கூடாது. “ப்ளஷ்’ செய்த பின்னும் மலத் துகள்கள் மிதந்து கொண்டிருந்தால், வாளியில் தண்ணீர் எடுத்து வேகமாக ஊற்றினால், எல்லா கசடுகளும் உள்ளே தள்ளப்பட்டு, தேங்கி இருக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கும். கோப்பைக்கு வலது பக்கத்தில், “ஹாண்ட் ஷவர்’ இருக்குமாறு அமைப்பது நலம். டிஷ்யூ பேப்பரின் உபயோகத்தை நாம் எள்ளி நகையாடுகிறோம். மலம் கழித்தபின், “டிஷ்யூ’ பேப்பரில் துடைத்து விட்டு, தண்ணீர் விட்டு கழுவினால், கை அதிகமாக மாசுபடுதல் தவிர்க்கப்பட்டு, தண்ணீர் செலவும், நோய்க் கிருமிகள் பரவுதலும் தடுக்கப்படுகிறது.
ஆனால் இந்த வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதில் சில நன்மைகள் இருந்தாலும் பல கெடுதல் உள்ளன. கடந்த 10 வருடங்களாக தான் வயிறு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மலம் கழிக்க சிரமப்படும் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும், இது நீண்ட நாட்களாக இருந்து வருகிறது என்று கூறி வைத்தியம் பார்க்க நிறைய பேர் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நாம் வெஸ்டர்ன் கழிவறை பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து மூல நோய் (hemorrhoids), குடல் (appendicitis), மலச்சிக்கல் (constipation), எரிச்சல் கொண்ட குடல் நோய் (irritable bowel syndrome) போன்ற உடல்நல கோளாறுகள் அதிகரித்து வருகின்றன. இதை பலரும் உணருவதில்லை. வீட்டில் சுத்தமாக தானே இருக்கும் இதனால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று விதண்டாவாதம் செய்பவர்கள் தான் அதிகம். டயட் மற்றும் வாழ்வியல் முறை மாற்றத்தோடு வெஸ்டர்ன் கழிவறையும் இந்த பிரச்சனைகளுக்கு ஓர் முக்கிய காரணம் என சில ஆய்வுகளின் மூலம் மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
வெஸ்டர்ன் கழிவறை பயன்படுத்துவதால் நாள்பட இது மலகுடத்தை பாதிக்கிறது. அதன் இயல்பு வடிவம் அல்லது நிலை தடைப்படுவதால் மலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மலச்சிக்கல், ஹெர்னியா இருப்பவர்கள், “வெஸ்டர்ன் டாய்லெட்’டை உபயோகிக்காமல் இருப்பது நலம். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முடக்குவாதம், மூட்டு வலி இருப்பவர்களுக்கு, “வெஸ்டர்ன் டாய்லெட்’ ஒரு வரப்பிரசாதம். சிறு வயதிலிருந்தே சாதாரண கழிப்பறையை உபயோகிப்பவர்களுக்கு, முழங்கால் வலி ஏற்படுவது குறைவு என மருத்துவ ஆய்வு கூறுகிறது!