.

Wednesday, November 25, 2015

தினமும் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள்




நம்மில் பலர், காக்கா குளியல் தான் குளிக்கிறோம். குளியல் அறைக்குள் செல்வார்கள் மொண்டு, மொண்டு தண்ணியை மேலே ஊற்றுவார்கள், சோப்புக் கட்டியை எடுத்து மேலும், கீழும் நாலு தேய்த்தப் பிறகு மீண்டும் தண்ணீரை மொண்டு ஊற்றிவிட்டு வந்துவிடுவார்கள்.


உங்கள் உடலில் நீங்கள் கட்டாயம் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள் சில இருக்கின்றன, அங்கு தான் நமது ஆட்கள் சரியாக தேய்த்து குளிக்க மாட்டார்கள். சிலருக்கு, சோம்பேறித்தனம், சிலருக்கு அவர்களது உடல் பாகங்களை தொட்டு, தேய்த்து கழுவுவதற்கு சங்கோஜம்.

• குளிக்கும் போது முகம் கழுவுவோம், ஆனால், நிறைய பேர் காதுகளை சுத்தம் செய்ய மறந்துவிடுவார்கள். இதன் காரணமாக தான் சிலருக்கு காதுகளுக்கு அருகில் கருப்பு பிடித்தது போல், கரு கரு வென்று காதுகளின் கீழ் பாகங்கள் இருக்கும். மற்றும் இதனால் சரும தொற்றுகள் ஏற்படலாம்.

• 99% பேர் அவர்களது தொப்புள் பகுதியை கழுவுவதே கிடையாது என்பது தான் உண்மை. தொப்பையை சுற்றி சோப்பை சுற்றோ, சுற்றென்று சுத்துவோம், ஆனால் தொப்புள் பகுதியை சுத்தம் செய்ய மாட்டோம். உங்கள் தொப்புள் பகுதியில் மட்டுமே 2,368 வகையான பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

• சிலர் அழுக்கு போக கை விரல்களை கழுவுவது கிடையாது. இது தான் மிக முக்கியம். கை விரல் நக இடுக்குகளில் சேரும் அழுக்கு, நீங்கள் சாப்பிடும் போது உடலுக்குள் போகும். இதனால் உங்கள் வயிற்றில் நிறைய பாக்டீரியாக்கள் சேருகின்றன.

• தொடையின் இடுக்குகளில் தான் ஓர் நாளில் நிறைய வியர்வையின் காரணமாக அழுக்கு சேருகிறது. எனவே, அவ்விடங்களில் நன்கு தேய்த்து கழுவ வேண்டியது அவசியம். குளித்தப் பிறகு அந்த இடத்தில் உடல் துடைக்கும் டவலைக் கொண்டு ஈரம் போகும் வரை நன்கு துடைக்க வேண்டும்.
Disqus Comments