.

Tuesday, November 17, 2015

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் கஸ்தூரி மஞ்சள் :-


மஞ்சளைப் போலவே பயன் தருவது கஸ்தூரி மஞ்சள். "குர்குமா அரோமேட்டிகா'' என்பது இதன் தாவரப் பெயராகும். "கற்பூரா,'' "ஆரண்ய ஜெனிகந்தா,'' "வன அரித்ரா'' என்று ஆயுர் வேதம் குறிப்பிடும். இதனின்று எடுக்கும் ஒருவகை எண்ணெய் நுண்கிருமிகளைப் போக்க வல்லது.


(ஆன்டி மைக்ரோபியல்) பூஞ்சக்காளானை ஒழிக்க வல்லது (ஆன்டிஃபங்கல்) புழுக்களைக் கொல்லவல்லது. (ஆன்த் தெல்மின்திக்) மேலும் இதை மேற்பூச்சாக உபயோகப்படுத்தும் போது கீழே விழுந்ததால் ஏற்பட்ட சிராய்ப்பு காயங்கள், சுளுக்கு, தோலின் மீது ஏற்படும் வேர்க்குரு போன்ற நமைச்சல் தரும் கொப்புளங்கள் ஆகியன போகும்.

கஸ்தூரி மஞ்சளில் குர்க்குமால், குர்டியோன் என்னும் ரசாயனப் பொருள்கள் புற்று நோய்ச் செல்கள் உருவாவதைத் தடுக்க வல்லது. இதைத் தீ நீராக்கிக் குடிப்பதால் பித்த சம்பந்தமான வயிற்றுக் கோளாறுகள் குணமாகும். கஸ்தூரி மஞ்சளால் பெரும் புண்கள், காப்பான் எனுந் தோல் நோய் நுண்புழுக்கள், அக்கினி மந்தம் ஆகியவை குணமாகும்.

மேலும் ஆண்மையும், அறிவும், ஞாபக சக்தியும் பெருகும். கஸ்தூரி மஞ்சள் தூளைப் பொதுவாக 350மி.கி வரை உள்ளுக்குக் கொடுத்து வர வயிற்று நோய், குன்மம் ஆகியன குணாமாகும்.

1. சாதாரண மஞ்சளுக்கு பதிலாகப் பெண்கள் மஞ்சளை இடித்து தூளாக்கி வைத்துக் கொண்டோ அல்லது கல்லில் இழைத்தோ முகத்துக்குப் பூசி குளித்துவர முகப்பருக்கள், தேமல்கள், மெல்லிய முடிகள் வராமல் தடுக்கப்பட்டு முகம் பொலிவு பெறும்.

2. கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு இதில் 500மி.கி அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர வயிற்றுக் கோளாறுகள் குணமாவதுடன் பெண்களின் வெள்ளைப் போக்கு மற்றும் அதிக மாதவிடாய் போக்கு மட்டுப்படும்.

3. கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து விழுதாக்கி அடிபட்ட புண் மற்றும் ஆறாச் சிரங்குகள் மேல் பூசிவர விரைவில் ஆறிவிடும்.

4. கஸ்தூரி மஞ்சள் தூளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசிவர விரைவில் கட்டிகள் உடைந்து குணமாகும்.

5. கஸ்தூரி மஞ்சளைச் சுட்டு வரும் புகையை நுகர்ந்தால் மூக்குஒழுக்கு, மூக்குநமைச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.
Disqus Comments