.

Thursday, October 15, 2015

சிறு­நீ­ர­கத்தில் கற்கள் உருவாகுவதை எப்படி தெரிந்துகொள்வது?




ஒரு­வ­ருக்கு சிறு­நீ­ர­கத்தில் கல் ஏற்­பட்­டு­விட்டால், கீழ் வயிற்றில் அதீ­த­மான வயிற்­று­வலி ஏற்­படும். முதுகுப் பகு­தியில், சிறு­நீ­ரக மண்­ட­லத்தில் வலி அதி­க­மாக இருக்கும். சிறுநீர் கழிக்­கும்­போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சி­னைகள் இருக்கும். சிறு­நீ­ரகக் கல் இருப்­பதைக் கண்­ட­றிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரி­சோ­த­னைகள் போது­மா­னவை.


 
இதற்கு என்­னதான் சிகிச்சை?

சிறு­நீ­ர­கத்தில், சிறுநீர்ப் பையில், சிறு­நீ­ரகக் குழாயில் எங்கே கல் உள்­ளது என்று கண்­ட­றிந்­து­விட்டால், என்ன மாதி­ரி­யான சிகிச்சை அளிக்­கலாம் என்­பதை முடிவு செய்­து­வி­டலாம். சுமார் 5 மி.மீ. வரை அள­வுள்ள கற்­களை, மருந்து, மாத்­தி­ரைகள் மூல­மா­கவே கரைத்­து­வி­டலாம். பெரிய கற்­க­ளுக்கு வேறு மாதி­ரி­யான சிகிச்­சைகள் உள்­ளன.

வெளியில் இருந்து ஒலி அலைகள் மூலம் கல் உடைக்கும் முறை: (Extracorporeal shock wave lithotripsy)

இந்த முறையில் வெளியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் செலுத்­தப்­பட்டு கல் உடைக்­கப்­படும். 1 முதல் 1.5 செ.மீ. வரை அள­வுள்ள கற்­களை இந்த முறையில் அகற்­றலாம். ஆனால், கல் உடைக்­கப்­ப­டும்­போது அதன் சித­றல்கள் வேறு எங்­கேனும் சிக்­கிக்­கொள்ளும் ஆபத்து இதில் உண்டு.

துளை மூலம் சிறு­நீ­ர­கத்தில் கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை: (Percutaneous Nephro Lithotripsy)

ஒரு­கா­லத்தில் பெரிய சிறு­நீ­ரகக் கற்­களை அகற்ற திறந்த அறுவைச் சிகிச்சை செய்­யப்­பட்­டது. இதற்கு மாற்­றாக வந்­தது தான் இந்த முறை. முதுகில் சிறிய துளை போட்டு, 1.2 செ.மீ. அள­வுக்கு மேல் உள்ள கற்­களை வெளியே எடுக்கும் முறை இது.

பிறப்பு உறுப்பு வழியே கற்­களை அகற்றும் முறை (Retrograde intrarenal surgery):

எந்த அறுவைச் சிகிச்­சையும் இன்றி, பிறப்பு உறுப்பு வழி­யாக குழாய் போன்ற கரு­வியைச் செலுத்தி லேசர் கற்­றைகள் மூலம் கற்­களை உடைத்து வெளியே எடுக்கும் முறை இது. மெல்­லிய டெலஸ்கோப் துணை­யுடன் சிறு­நீ­ர­கத்தின் உள் அமைப்பைக் கணி­னியில் பார்த்­துக்­கொண்டே செய்­யப்­படும் சிகிச்சை இது என்­பதால், துல்­லி­ய­மான சிகிச்சை உத்­த­ர­வாதம். நோயா­ளிக்குத் துளி ரத்தச் சேதம்­கூட இந்த முறையில் ஏற்­ப­டாது என்­பது கூடுதல் நன்மை.

சிறு­நீ­ரகக் கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும் குறைந்­தது இரண்­டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்­கறி, பழங்­களைச் சாப்­பிட வேண்டும். கல்­சியம் ஆக்­சலேட், கல்­சியம் பாஸ்பேட் ஆகிய உப்­புக்­கள்தான் சிறு­நீ­ரகக் கற்கள் உரு­வாக முக்­கியக் கார­ணங்கள். எனவே, இவை உரு­வாக அதிக வாய்ப்­புள்ள மாட்­டி­றைச்சி மற்றும் ஆட்­டி­றைச்­சியைக் கூடு­மா­ன­வரை தவிர்க்­கலாம்.

சிறு­நீ­ரகக் கல் வந்­து­விட்டால், என்ன செய்ய வேண்டும்?

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்­சாறு, இளநீர், வாழைத்­தண்டு சாறு அதிகம் சேர்த்­துக்­கொள்ள வேண்டும். வாழைத்­தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக அளவில் உட­லுக்குத் தேவை­யான தாது உப்­புக்­களும் உள்­ளன. இவை சிறுநீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்­ளப்­படும். எலு­மிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்­களின் ஜூஸ் குடிப்­பதன் மூலம், அது சிறு­நீரில் அமிலத் தன்­மையைக் குறைத்து கல் உரு­வா­வதைத் தடுக்கும். ஒரு­வ­ருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்!
Disqus Comments