நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.இந்த நோய்க்கு வயது வரம்பு கிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:
தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம்.
விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.
திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம், சாதாரணமாக குழந்தைகளைப் பெறலாம் உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.
நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும். நீங்கள் மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம்.
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:
உங்கள் மருத்துவரை கலந்து அலோசிக்காமல் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவோ அல்லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது. நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.
நீர்நிலைகளில் நீராடுவது. இவ்வகையினருக்கு இது ஆபத்தான ஒன்று.
தேவையற்ற மன உளைச்சல் கூடாது.
மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் வலிப்பு வருவதை தூண்டலாம்.
நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண்டு வேலை செய்யக் கூடாது. அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது.