.

Tuesday, September 8, 2015

கருத்தடை மாத்திரையால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்



கருத்தடை மாத்திரை போடுறீங்களா..? - எச்சரிக்கை...!

கருத்தடை மாத்திரையானது தேவையில்லாமல் கர்ப்பமாவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

அப்போது இந்த மாத்திரையை 72 மணிநேரத்திற்குள் போட்டால், கர்ப்பமாவதைத் தடுக்கலாம்.


இவ்வாறு பயன்படுத்தும் மாத்திரையானது தற்போது மருந்துக் கடைகளில் எளிதில் கிடைக்கிறது. அதிலும் இந்த மாத்திரையை தொடர்ந்து அடிக்கடி எடுக்கக்கூடாது.

ஏனெனில் இவை உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இப்போது அந்த மாத்திரைகளை எடுப்பதால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

* இந்த மாத்திரையை எடுப்பதால், கருவில் உள்ள கருமுட்டைக்கு தொந்தரவை ஏற்படுத்தி, இனப்பெருக்க செயலைத் தடுக்கிறது. அதிலும் இவ்வாறு பயன்படுத்தியப் பின்பு, அடுத்த இரண்டு மாதவிடாயின் போது பிரச்சனையை ஏற்படுத்தும். சில சமயங்களில் நாட்கள் தள்ளிப்போகலாம் அல்லது ஒரு வாரத்திற்கு முன்னலோ/பின்னாலோ ஏற்படலாம். ஒரு மாத்திரையை எடுத்தால், இரண்டு மாதங்களுக்கு மாதவிடாய்க்கு பிரச்சனை ஏற்படலாம். அதுவே தொடர்ந்து எடுத்தால், மாதவிடாயே பிரச்சனையாகிவிடலாம்.

* சில நேரங்களில் குமட்டல் கூட ஏற்படும். உடனே கர்ப்பத்தின் காரணமாக என்று நினைக்க வேண்டாம், சாதாரணமாகத் தான் அடிக்கடி ஏற்படும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக அநத்மாத்திரைகளை போட்டுவதால், அந்த குமட்டல் ஏற்படுகிறது. மேலும் நிறைய பெண்களுக்கு வாந்தி மற்றும் உடலில் சற்று மந்தம் போன்றவையும் ஏற்படும்.

* கர்ப்பத் தடை மாத்திரைகளைப் போடுவதால், அந்த மாத்திரைகளை போட்ட சில நாட்களில் இரத்தப்போக்கு ஏற்படும். சில நேரத்தில் அந்த மாத்திரைகளை போட்டதுமே, இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக பயப்பட வேண்டாம். அவ்வாறு வந்தால், நிச்சம் கர்ப்பம் ஆக முடியாது என்பதற்கான ஒரு அறிகுறி. மேலும் சாதாரணமாக பெண்களுக்கு மாதவிடாயானது 6-7 நாட்கள் தான் இருக்கும். ஆனால் சிலருக்கு ஒரு வாரத்திற்கு மேலே கூட இருக்கும். அப்படி இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* இந்த மாத்திரை போட்டு ஏற்படும் அடுத்த மாதவிடாயின் போது கடும் இரத்தப் போக்குடன், கடுமையான வயிற்றுவலியும் ஏற்படும். இதனால் எதற்கும் பயப்பட வேண்டாம். இது இனப்பெருக்க மண்டலத்திற்கு சிறு இடையூறை ஏற்படுத்துகிறது. ஆகவே எப்போது மாதவிடாய் எஏற்படுகிறதோ, அப்போது அளவுக்கு மீறிய வயிற்று வலிக்கு ஆளாக நேரிடும். இந்த நேரத்தில் சூடாக ஏதாவது சாப்பிட்டால் நல்லது.

மேற்கூறியவையே கருத்தடை மாத்திரைகளால் ஏற்படும் பிரச்சனைகள். அதுமட்டுமல்லாமல், சிலருக்கு தலை வலி, மங்கலான பார்வை அல்லது மிகுந்த சோர்வு கூட உடலில் ஏற்படும். அதிலும் இத்தகைய பிரச்சனைகள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஏற்படும். முக்கியமாக இந்த மாத்திரையை அடிக்கடி எடுத்தால், இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டு, பின் கருவுறுதலுக்கு பிற்காலத்தில் பெரும் பிரச்சனை ஏற்படும். ஆகவே எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
Disqus Comments