.

Monday, July 6, 2015

அதிக எடையும் உடல் பருமனும் பற்றிய மருத்துவ குறிப்புகள்



அதிக எடை’ என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் ‘அதிக பருமன்’ என்று கூற முடியாது. உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு வீஜ்ர்கள் சராசரி எடையைவிடச் சற்று அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் அதிகக் கொழுப்புச்சத்தி இருப்பதில்லை. அது சதை வளர்ச்சி. கொழுப்பின் அளவும் அதிகரித்து, உடலின் சராசரி எடையும் அதிகமிருந்தால் அது உடல் பருமனின்றி வேறில்லை.


மனித எடையை தோராயமாகக் கணக்கிடும் முறை

ஒருவரின் உயரம் சென்டிமீட்டர் கணக்கில் எவ்வளவோ அதில் 100ஐக் கழிக்க வேண்டும். பின் அதிலிருந்து 90 சதவீத அளவை அறியவேண்டும். ஒருவர் 170 சென்டி மீட்டர் உயரமிருந்தால் 100ஐக் கழிக்கும்போது 70 வருகிறது. அதில் 90 சதவீதம் கணக்கிட்டால் 63 வருகிறது. 170 செ.மீ. உயரமுள்ளவருக்கு 63 கிலோ எடைதான் ஏறத்தாழ சரியான எடையாக இருக்கும். இந்த எடையில் பத்து சதவீதம் அதிகரித்தால் கூட ‘உடல் பருமன்’ என்று கூற முடியாது. மாறாக, அதற்கும் மேல் தொடர்ந்து எடை அதிகரிக்குமானால் உடல் பருமன் ஏற்பட்டே தீரும்.

சராசரி எடையில் 10 முதல் 15 சதம் அதிகரித்தால் அதனைச் சிறிதளவு பருமன் எனக் கருதலாம்.. 15 முதல் 20 சதம் அதிகரித்தால் நடுத்தர பருமன் எனக் கருதலாம். 20 சதவீதத்திற்கும் மேல் எடை அதிகரித்தால் அதிக பருமன் என அறியலாம்.

சிறிதளவு பருமனாக இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க உடல் தொந்தரவுகள் இல்லாமலிருக்கலாம். இருப்பினும் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்ற அழகுக் கோணத்திலிருந்து பார்ப்பவர்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

நடுத்தர பருமனாளிகளும் அதிக எடையுள்ள குண்டர்களும் உடல் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாலும், எடையைச் சுமக்க முடியாமலும், மூச்சு வாங்குவதாலும், இதர கடும் நோய்களாலும் அவதிக்கு ஆளாகின்றனர்.

உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன?

உடலில் அன்றாட இயக்கங்களுக்கு வேண்டிய சக்தியளிப்பதற்குத் தேவையான அளவைவிட அதிகளவு உணவு உண்பதால் தேவைக்கு அதிகமான கலோரிகள் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. தேவையைவிட ஒருவர் தினம் 50 கலோரி அதிகம் எடுத்தால் ஒரே ஆண்டுக்குள் 2 கிலோ எடை அதிகரித்துவிடும்.

கலோரி என்பது ஒன்றரை லிட்டர் நீரை 15 டிகிரி செண்டிகிரேடிலிருந்து 160 டிகிரி வரைச் சூடாக்கத் தேவையான உஷ்ணசக்தி. இக்கலோரியை (எரிசக்தியை) உணவுகள், காய்கறிகள், பழங்கள் மூலம் நாம் பெறுகிறோம். வெவ்வேறு உணவுப் பொருட்களில் வெவ்வேறு அளவு கலோரிகள் கிடைக்கின்றன.

வசதியாக, உட்கார்ந்தே பணிபுரியும் சொகுசுப் பேர்வழிகளுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 20 கலோரிகள் தேவைப்படலாம். ஓரளவு உடலுழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 25 கலோரிகள் தேவைப்படலாம். அதிகம் உடற்பயிற்சி, உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களது எடையில் ஒரு கிலோவிற்கு 30 கலோரிகள் தேவைப்படலாம்.

மேலும் உண்ணும் உணவின் அளவைவிட தரத்தையும் கலோரிகளையும் கொள்ளவேண்டும். 100 கிராம் வெள்ளரியில் 16 கலோரி சத்தும் 100 கிராம் வறுத்த நிலக்கடலையில் 600 கலோரி சத்தும், 1 கிராம் புரதத்தில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கொழுப்பில் 9 கலோரி சத்தும், 1 சப்பாத்தியில் 100 கலோரிகளும், 1 பிஸ்கட்டில் 40 கலோரிகளும், 75 கிராம் சாதத்தில் 100 கலோரிகளும், 1 அவுன்ஸ் ஆட்டுக்கறியில் 500 கலோரிகளும், 1 அவுன்ஸ் மீனில் 360 கலோரிகளும் கிடைக்கின்றன. வயது வந்த ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 1400 முதல் 1900 வரை கலோரிகள் தேவைப்படக்கூடும். இதில் குறைவு ஏற்பட்டாலும், அதிகம் ஏற்பட்டாலும் உடலின் அமைப்பு, செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

ஒழுங்கற்ற உணவுப் பழக்கமும், அதிகக் கொழுப்பு உணவுகள் உண்பதும் குறிப்பாக எண்ணெய் பண்டங்கள், பால் பொருட்கள், அசைவ உணவுகள், சாக்லேட் இனிப்புகள், ஐஸ்கிரீம், மது, நெய், வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு போன்றவைகளால் உடல் எடை அதிகரிக்கிறது. வாயுப் பண்டங்களாலும் (பருப்பு, உருளைகிழங்கு) எடை கூடுகிறது. இருவேளை உணவுகளுக்கு இடையில் நொறுக்குத்தீனிகள் மெல்லும் பழக்கமும், டிவி பார்த்தபடி அல்லது வேறு வேலையின்போது நொறுக்குத்தீனிகள் தின்னும் பழக்கமும் உடல்எடையை அதிகரிக்கச் செய்கின்றன.

உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ இல்லாததால், பகலில் அதிகளவு சாப்பிட்டுவிட்டு அதிகம் நேரம் தூங்குவதால், பொதுவாக அதிக ஓய்வும் உறக்கமும் கொள்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. சில குடும்பங்களில் பாரம்பரிய தன்மை காரணமாக பருமனான பெற்றோருக்கு பருமனான குழந்தைகள் பிறக்கின்றனர்.

ஹார்மோன் இயக்கக் கோளாறுகளாலும், அடிக்கடி பிரசவங்கள், கருச்சிதைவுகள், அறுவைச் சிகிச்சைகளைத் தொடர்ந்தும், NSAID போன்ற சில ஆங்கில மருந்துகள், உடலில் நீர் திரவத் தேக்கங்கள் உண்டாக்கும் ஸ்டீராய்டுகள், கருத்தடை மாத்திரைகள் போன்ற காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது. மேலும், இவை உடல் பருமனை உண்டாக்குவதில் முக்கியக் குற்றவாளிகளாகவும் உள்ளன.

உடல் பருமனால் பல பிரச்சனைகள் :

உடல் பருமனால் ஒரு மனிதனுக்கு உடல்ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அதிக பருமனால் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய பல நோய்கள் தாக்குகின்றன. மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை, இடுப்பு எலும்புகள், முதுகுத்தண்டு, முழங்கால் மூட்டுகள் தேய்மானம், குடலிறக்கம், அசுத்த ரத்த நாளப் புடைப்பு... போன்ற பல மோசமான நோய்கள் முற்றுகையிடுகின்றன.

மந்த இயக்கம், சோர்வு, பலவீனம் காரணமாக அடிக்கடி கீழே விழ நேரிடலாம் அல்லது விபத்து நேரிடலாம். வீட்டில், வயலில், தொழிற்சாலையில், இதரபணியிடங்களில் நிற்பது, நடப்பது, பணியாற்றுவதும், உடல் சுகாதாரம் பேணுவதும் மிகச்சிரமம். உடல் பருமன் ஒருவித நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது. உளவியல் ரீதியாக மனச்சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகள் பாதிக்கின்றன. தனது பருமன் தனக்கு மட்டுமின்றி குடும்பத் திற்கும், உலகத்திற்கும் சுமை எனும் உணர்வு ஏற்பட்டு விரக்தியும் மன அழுத்தமும் மேலோங்கும்.

என்ன செய்யவேண்டும்?

ஓரளவு மட்டுமே எடை அதிகமிருப்பவர்கள் அதிக மாவுப் பொருள், கொழுப்பு பொருள் உண்பதைக் குறைக்கவேண்டும். ஓரளவு உடற் பயிற்சி அல்லது யோகா மேற்கொள்ளவேண்டும்.

அதிக எடை எனில், உணவில் அதிகக் கட்டுப்பாடுகள் தேவை. உபவாசம், பழவகைள், வாரம் 1 நாள் திரவ உணவுகள் மட்டும் அருந்துதல் எனப் பழக்கப்படுத்தினால் பசியின் அளவு குறையும். குறைந்தது மாதம் 1 கிலோ எடையேனும் குறையும். கொழுப்பு மற்றும் மாவு உணவுகளுக்குப் பதிலாக கணிசமான அளவு பழங்கள் உண்ண வேண்டும். திறந்த வெளிக் காற்றில் அன்றாடம் உடற்பயிற்சி, யோகா, சுறுசுறுப்பான நடை போன்றவற்றை அவரவர் எடை, வயது, உடற்தகுதிக்கேற்ப எதுவாகவும் மேற்கொள்ளலாம்.

நிலையில் எடை குறையலாம். அடுத்தடுத்து பயன்படுத்தும்போது அவை பயனற்றவை என்று உறுதியாகும். அடிப்படையாக வாழ்க்கை முறையை, உணவு முறையை மாற்ற வேண்டும். உடல் பருமனைக் கட்டுப்படுத்த விரும்பு வோர் மும்முனைப் போருக்குத் தயாராக வேண்டும். 1. உணவுப் பழக்கங்களை ஒழுங்குப் படுத்தவேண்டும் 2. வாழ்க்கை நடைமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் 3. பக்கவிளைவு இல்லாத உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஹோமியோபதி மருந்துகள் சிறப்பாக உதவுகின்றன.
Disqus Comments