.

Thursday, July 30, 2015

தேனை இப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?



தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும்.

இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது.

காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின்  மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது.

சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது.

வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு ஏறாது.

வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.

பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது... ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம். எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும்.

கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும். நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.
Disqus Comments