.

Tuesday, June 16, 2015

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் 15 உணவுகள்!



ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும். எனவே உடலைத் தூய்மைப் படுத்தி பாதுகாப்பதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பன கரோட்டினாய்டுகள், ஃப்ளேவோனாய்டுகள், மெலடோனின், வைட்டமின்களில் ஏ, சி, ஈ, பைட்டோ கெமிக்கல்களான பீட்டா-கரோட்டீன் மற்றும் லைகோபைன் மற்றும் தாது சத்துக்களான செலீனியம் மற்றும் ஜிங்கு போன்றவை. இவை அனைத்து உடலில் போதிய அளவு இருந்தால், உடலில் உள்ள ரேடிக்கல்கள், கழிவுகளாக மாற்றப்பட்டு, மலம் மற்றும் சிறுநீர் வழியே வெளியேற்றப்படும்.

எனவே தான், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் முக்கியமாக தேவைப்படுகிறது. எனவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டியுள்ளது. இந்த உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு, சருமமும் அழகாக மின்னும். அதுமட்டுமின்றி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், டைப்-2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவற்றை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது.

கிவி

வைட்டமின் சி அதிகம் உள்ள மற்ற பழங்களைப் போன்றே, கிவிப் பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே இதனை தவறாமல் சாப்பிடுங்கள்.

பரட்டைக்கீரை

இந்த பச்சை இலை காய்கறியில் பாலிஃபீனோலிக் ஃப்ளேவனாய்டு என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், புற்றுநோய் மற்றும் இதய நோய் உண்டாவது தடுக்கப்படும்.

பசலைக் கீரை

கீரைகளில் பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கும். குறிப்பாக பசலைக் கீரையில் லுடீன் (lutein), ஸீக்ஸாக்தைன் (zeaxanthin) என்னும் கரோட்டினாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது மூளையில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். அதிலும் அல்சீமியர் நோய் வராமல் தடுக்கும்.

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, பொலிவோடு இருக்கும்.

களைக்கோசு

இதில் பைட்டோ கெமிக்கல் அதிகம் இருப்பதோடு, உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

பீட்ரூட்

பூட்ரூட்டில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு பிட்டாகவும் இருக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ப்ராக்கோலி

மற்ற பச்சை இலைக் காய்கறிகளைப் போன்றே, ப்ராக்கோலியிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் மற்றும் பல நோய்களை எதிர்த்துப் போராடவும் சிறந்ததாக உள்ளது.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஏனெனில் இந்த ஆப்பிளிலும் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

பூண்டு

பூண்டில் ஆன்டி பயாடிக் பொருள் அதிகம் உள்ளது. அதே சமயம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ, பி மற்றும் சி, செலீனியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவையும் அதிகம் இருப்பதால், இதனை சாப்பிடும் போது உடலில் உள்ள இரத்த அழுத்தம் குறைகிறது.

குடைமிளகாய்
குடைமிளகாயில் கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் சி என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே எந்த வகையான குடைமிளகாயையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, ஏ, ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா கரோட்டீன் இருக்கிறது. ஆகவே இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.

பீன்ஸ்
அனைத்து வகையான பீன்ஸிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அவ்வப்போது சேர்த்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.

பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றில் புரோட்டீன், வைட்டமின் மற்றும இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, தேவையற்ற கழிவுகளையும் வெளியேற்றிவிடும்.

மாதுளை

சுவை மிகுந்த பழமான மாதுளையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

தக்காளி
தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது உடலைத் தாக்கும் கிருமிகளை அழிக்க வல்லது. அதுமட்டுமின்றி, இதனை சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, உடல் எடையை குறைக்கலாம்
Disqus Comments