.

Thursday, June 25, 2015

இப்படியெல்லாம் சாப்பிடகூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?



சாப்பிடுவதற்கு என்று வழிமுறை உள்ளது அதன்படி நாம் நடந்துகொண்டால் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பித்து கொள்ளலாம்.எவ்வாறெல்லாம் சாப்பிடகூடாது என்பதை கீழே கொடுத்துள்ளோம் . படித்து பயன்பெறுங்கள்


பிரியாணி சமைக்கும்போது, தயிர் அல்லது பால் சேர்க்கக் கூடாது. இதனால் தோல் பிரச்னைகள் வரக்கூடும்.

பிரியாணி சாப்பிட்டதும், குளிர்பானம் குடித்தால் உடனடியாகச் செரிமானம் ஆகும் என்பது தவறு. பிரியாணி சாப்பிட்ட பின்,  செரிமானமாக சூடாக இஞ்சி டீ குடிக்கலாம்.

புளிப்புச் சுவையுடன் பால் சேர்த்துக் குடிக்கக் கூடாது.

வைட்டமின் சி பழங்கள், சிட்ரஸ் பழங்களுடன் ஐஸ்கிரீமை சேர்க்கக் கூடாது.

மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பழங்களுடன் பால் சேர்த்து மில்க் ஷேக்காக சாப்பிடக் கூடாது.

அதிக செரிமான சக்திகொண்டவர்கள், ஆப்பிள் மற்றும் வாழைப்பழ மில்க் ஷேக் அருந்தலாம்.

பிரெட் டோஸ்ட் செய்யும்போது, பிரெட்டை பாலில் நனைத்து, முட்டையில் பிரட்டி டோஸ்ட்செய்து, அதில், காய்கறிக் கலவையை வைத்துக் கொடுக்கின்றனர். இது வயிற்றுக் கோளாறை உருவாக்கும்.

மஞ்சள், நல்லெண்ணெய், வெந்தயம், பூண்டு தட்டிப் போட்டு பருப்பை வேகவைக்க வேண்டும்.

மது அருந்திய பிறகு அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது.

இரண்டு எதிர்வினைகள் உடலில் ஒன்றாக சேரும்போது வேதி மாற்றம் உடலில் நடைபெறும்.

‘ஜெனரல் டயட்’ எனப்படும் பொதுவான உணவுமுறை எல்லோருக்கும் பொருந்தாது. ஆதலால் மருத்துவரின் ஆலோசனைப்படி தனக்கான உணவுமுறையை பின்பற்றலாம்.
Disqus Comments