உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான்.
மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம். அதுமட்டுமின்றி கால்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகிவிடாது. ஏனெனில் கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் மாதம் மாதம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால், அதிலேயே பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். மேலும் பிரசவத்தின் போதும் நிறைய் கால்சியமானது போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது எந்த உணவுகளிலெல்லாம் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதைப் பார்ப்போமா!!!
பால்
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.
தயிர்
பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும் பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.
மத்தி மீன்
மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது, அத்தகைய மீனில் 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.
சீஸ்
பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
உலர் அத்திப்பழம்
அத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும் 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.
பச்சை இலைக்காய்கறிகள்
பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
கடல் சிப்பி
பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70-80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.
இறால்
இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே தீயை குறைவில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.
எள்
பொதுவாக எள்ளை அதிகமாக சாப்பிட மாட்டோம். ஆனால் ஒரு டீஸ்பூன் எள்ளில், ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது.
பிரேசில் நட்ஸ்
6 பிரேசில் நட்ஸில் 45 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த நட்ஸிலும் அதிகமான புரோட்டீன் உள்ளது.
உலர்த்திய மூலிகைகள்
நிறைய உலர்த்திய மூலிகைகளிலும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. எப்படியிருப்பினும் இத்தகைய மூலிகைகளை அப்படியே சாப்பிட முடியாது. ஆனால் அவற்றை சூப், குழம்பு போன்றவற்றில் தினமும் சிறிது சேர்த்து சாப்பிட்டால் நல்லது.
டோஃபு
டோஃபு என்பது சோயா பாலினால் உருவான ஒரு வகையாக சீஸ். பொதுவாக சோயா பாலிலும் கால்சியம் அதிகம் இருக்கும். எனவே இந்த டோஃபுவிலும் நிச்சயம் கால்சியம் அதிகம் இருக்கும்.
ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.
சாலமன்
சாலமன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, இந்த மீன் கடல் நீரில் உள்ள கனிமச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், இதனை முள்ளோடு சாப்பிட வேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துக்களையும் பெறலாம்.
சோயா பால்
சோயா பாலில் சாதாண பாலை விட அதிக அளவில் கால்சியம் இல்லாவிட்டாலும், ஒரு அவுண்ஸ் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்தை பெறலாம்.
ஓட்ஸ்
ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.
அறுகீரை (Arugula)
இது ஒருவகையான கீரை வகைகளுள் ஒன்று. இதனை பொதுவாக சாலட்டில் தான் பயன்படுத்துவார்கள். இந்த கீரையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால்,. இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
வெள்ளை காராமணி
பொதுவாக பீன்ஸில் கால்சியம் அதிகம் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கமாட்டோம். ஆனால் இதிலும் ஓரளவு கால்சியம் நிறைந்துள்ளது. அதிலும் 1/2 கப் வெள்ளைக் காராமணியில் 100 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.