.

Friday, April 10, 2015

உங்களுக்கு அக்கு பங்சர் சிகிச்சை பற்றி தெரியுமா ?


1 . அக்கு பங்சர் சிகிச்சை என்றால் என்ன?

அக்கு பங்சர் என்பது மயிரிழையைக் காட்டிலும் மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல் கொண்டு தோலின் மேல் பகுதியில் தொடுவதன் மூலம், நோய்களை களையும் மருத்துவ முறை.


2. அக்கு பங்சர் சிகிச்சையில், நோய் எவ்வாறு பார்க்கப்படுகிறது?

இயற்கை விதிகளை மீறுவதே நோய்க்கான முதற்காரணம். பசியோடு சாப்பிடாமல் இருப்பதும், பசியின்றி சாப்பிடுவதும். அளவுக்கதிகமாக சாப்பிடுவதும், ஓய்வு நேரத்தில் உழைப்பதும், அதிகபடியான தூக்கமும் இவைகளே இயற்கை விதிமீறல். இவற்றோடு புகை, மது போன்ற தீய பழக்க வழக்கங்கள் சேர்ந்து, நோய்களை உருவாக்குகின்றன. 

மேற்சொன்ன காரணங்களால் உடல் உறுப்புகளில், கழிவுகள் தேக்கம் கொள்கின்றன. இதுவே நோயின் முதற் நிலை. இந்த கழிவுத் தேக்கங்கள் அதிகமாகி, உடலில் உள்ள உறுப்புகளை பாதிக்கத் துவங்குவது இரண்டாம் நிலை.

3. அக்கு பங்சர் சிகிச்சையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய பத்தியங்கள் ஏதேனும் உண்டா?

பசிக்கும் போது சாப்பிடுவதும். இரவு நேரங்களில் உறங்குவதும் ஆரோக்கியத்திற்கான அடிப்படை வழிகள். இவற்றை முறையாக பின்பற்றினாலே போதுமானது. வேறு பத்தியங்கள் எதுவும் கிடையாது.

4 .அக்கு பங்சர் முறையில் சிகிச்சை மேற்கொள்ள, ஆங்கில மருத்துவ முறையில் பரிசோதனைகள் தேவையா?

கண்டிப்பாக பயன்படாது. அக்கு பங்சர் சிகிச்சைக்கு, அது தேவையே இல்லை. மனித உடலில், சக்தி மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக வேதி மாற்றங்கள் ஏற்படுகின்றன. பரிசோதனை மூலம் அறிந்து கொள்வது எல்லாமே, வேதி மாற்றங்களை தான். இவற்றை வைத்து, சக்தி மாற்றத்தை அறியவோ, சீர்படுத்தவோ முடியாது. 

5 .பரிசோதனைகள் இல்லாமல், நோய் குணமாகிவிட்டது என்பதை எப்படி அறிந்து கொள்வது?

ஒரு நோயாளியின் உணர்வை மட்டுமே, நூற்றுக்கு நூறு நம்ப முடியும். அது என்ன கூறுகிறதோ அதுதான் உண்மை. பரிசோதனை கருவிகளையும், பரிசோதனைகளையும், ஒரு நோயாளியின் உணர்விற்கு ஈடாக கருத முடியாது.

6. சில சிகிச்சை முறைகளில், நோய் அதிகமாகி பின் குறையும் என்கின்றனரே! அக்கு பங்சர் சிகிச்சையிலும் அப்படி வாய்ப்புண்டா?

ஒரு சிலருக்கு அப்படி ஏற்படலாம். அது நல்ல மாற்றம்தான். ஒருவருக்கு நுரையீரலில் சளி அதிகமாகி இருமல் வருகிறது. இதில் சளிதான் நோய். இருமல், சளியை வெளியேற்றும் உடலின் முயற்சி. சிகிச்சையின் போது, சிலருக்கு இருமல் அதிகரித்து வெளியேறும். அப்படி வெளியேறுவது மட்டும்தான், குணமடைய ஒரே வழி.

7.அக்கு பங்சர் சிகிச்சை மேற்கொண்டிருக்கும்போது, திடீரென்று காயச்சல், தலைவலி வந்தால், ஆங்கில மருந்துகள் எடுத்து கொள்ளலாமா?

அக்கு பங்சர் சிகிச்சை மேற்கொள்ளும் போது, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலம் அடைந்து, கழிவுகள் நீங்கும். அப்போது காய்ச்சல், தலைவலி போன்ற கஷ்டங்கள் உண்டாகும். அப்படி உண்டானால், சிகிச்சை முறை நன்கு வேலை செய்கிறது என்று அர்த்தம்.

8.அக்கு பங்சரில், மன நோய்களை குணப்படுத்த முடியுமா?

கண்டிப்பாக. மனநோய்கள் மூளை சம்பந்தப்பட்டதல்ல. உள்ளுறுப்புகளின் சீரற்ற இயக்கமே மூளையில் பிரதிபலிக்கிறது. உடல் உறுப்புகளில் சக்தி குறையும்போது, மனநிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதுவே, ஒரு நோயின் ஆரம்ப நிலை.

9.அக்கு பங்சர் சிகிச்சை பெற, எத்தனை நாளைக்கு ஒரு முறை மருத்துவரை பார்க்க வர வேண்டும்?

தினமும் மருத்துவரை பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை; அவசியமும் இல்லை. ஏழு முதல் ௧௫ நாட்களுக்கு ஒருமுறை சிகிச்சை செய்வது, நோயிலிருந்து விரைவாக குணமடைய வழிவகுக்கும். 

10. பெண்கள், மாதவிடாய் காலங்களில் சிகிச்சை செய்து கொள்ளலாமா?

தாராளமாக செய்து கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளில் இருந்து குணமடைய, சிகிச்சை உதவும்.
Disqus Comments