.

Monday, January 26, 2015

முதுமையில் தாய்மை சரியானதுதானா?



இப்போதெல்லாம் திருமணம் ஆன தம்பதியர் பலர், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டு வருகிறார்கள். இவர்களில் பலர், தங்கள் லட்சியத்தை எட்டுவதற்காகவும், குடும்பத்தேவைகள்
அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காகவும் குழந்தை பெறுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப்போடுகிறார்கள்.

இப்படி, குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டு, முதுமையில் தாய்மைப்பேற்றை அடையும் பெண்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் ஆய்வு கட்டுரை ஒன்று சமர்பிக்கப்பட்டது. அதில் மேலும் கூறப்பட்டு இருந்ததாவது:-


"பெண்கள் வயது அதிகம் ஆன காலகட்டத்தில் தாய்மைப்பேறு அடைய விரும்புவது என்ற பிரச்சினை உலகின் பல நாடுகளிலும் காணப்படுகிறது.

செயற்கை கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இந்த காலதாமதமான தாய்மைப்பேறு என்பது மருத்துவ அறிவியலின் உதவியுடன் அடையக் கூடியதாக ஒன்றாகவே ஆகியுள்ளது.

ஆனால், மருத்துவ ரீதியாக இது சாத்தியமாகிவிட்டாலும் 40 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். மேலும், இவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் மருத்துவ ரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

இதுதவிர, சமூக, உளவியல் ரீதியான பிரச்சினைகளும் இம்மாதிரியான காலதாமதமான தாய்மைப்பேறு காரணமாக ஏற்படுகின்றன...'' என்று, பல தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

நீங்களும் குழந்தை பெறுவதை தள்ளிப்போடும் தம்பதியர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். குறித்த காலத்தில் விதைத்தால்தான் மகசூல் சரியாக கிடைக்கும் என்பது இதற்கும் பொருந்தும்.
Disqus Comments