குளிர்காலத்தில் நோய் இவர்களை எளிதில் பற்றிக் கொள்கிறது. மார்புச்சளி, இருமல், இருதய வியாதி, நரம்புத் தளர்ச்சி, தோலில் ஏற்படும் புண்கள், மூட்டு வலிகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகிய பிணிகள் குளிர்காலத்தில் தலைவிரித்து ஆடுகின்றன.
வயதானவர்கள் கோலை ஊன்றி நடக்கும்போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து, காலை முறித்துக் கொள்கிறார்கள்; கையை ஒடித்துக் கொள்கிறார்கள். வயதான காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால் அவ்வளவுதான்! அவர்கள் நீண்டகாலம் துன்பத்தில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்!
வயதானவர்கள் விடும் மூச்சு: சீழ் படிந்த கட்டிகளில் சீழ் நோய் ஏற்பட்டால் நோய் அதிகரிக்க, அதிகரிக்க உடல் சூடேறுவதற்குப் பதிலாக உடலில் வெப்பநிலை குறைகிறது. முதியவர்கள் குளிர்காலத்தில் ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேல் மூச்சு விடுகிறார்கள்.
குளிர்காலத்தில் அவர்கள் மூச்சு விடும்போது ஒரு கெட்டவாடை அடித்துக் கொண்டிருக்கும். வயிற்றில் நீர் தேங்குவதால் வயிறு உப்பிக் காணப்படும். விரைப்பகுதியில் அதிகம் நீர் தேங்குவதால் தொளதொளவென்று தொங்கிக் காணப்படும்.
சிறுநீர்த் தொந்திரவுகள்:
வயதான காலத்தில் ‘பிராஸ்டேட் வீக்கம்’ என்ற நோய் காணப்படும். குளிர்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பர். ஆனால் அவர்களால் முக்கிக் கொண்டு பலமாகச் சிறுநீர் கழிக்க முடியாது. ஏனென்றால் முக்கியவுடன் பிராஸ்டேட் சிறுநீர் குழாயை அடைத்துவிடும் ஆகவே முக்காமல் சொட்டுச் சொட்டாகச் சில மணித்துளி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படும். அப்போது சிறுநீர் அவர்களது உடையில் பட்டு, அதுவிரைவில் பட்டு பட்டு, அந்த இடத்தில் புண் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் நிமிர்ந்தும் நடக்க முடியாது. காலை அகற்றி, அகற்றி நடப்பார்கள். நாளாக, நாளாகச் சிறுநீரும், மலமும் அடக்கும் தன்மையிழந்து தானாகவே வெளியேறும்.
வயதானவர்களைக் காப்பாற்றும் வழிகள்
குளிர்காலத்தில் ஓய்வு தேவை. அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருக்கக் கூடாது. காலை, மாலைகளில் உடற்பயிற்சி முடிந்ததும் மற்ற நேரங்களில் அவர்கள் ‘‘பெட்’’ ரெஸ்டில் இருப்பது நல்லது. காலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும்போது, தலைக்குக் குரங்குக் குல்லா அணிந்துசெல்வது நலம். அல்லது தலைக்கு மப்ளர் சுற்றிக் கொள்ளலாம்.
அவர்கள் படுக்கை கதகதப்பான இடத்தில் அமைந்திருக்க வேண்டும்.
வயதானவர்களுக்குப் பிணி வந்து விட்டால் படுக்கையிலே ஓய்வெடுக்க வேண்டும்.
அவர்களுடன் பழகுவதற்குக் குழந்தைகயோ, பிணியாளர்களையோ அனுமதிக்கக்கூடாது.
சக்திக் குறைவினால் வயதானவர்களுக்கு இருமல் வராது. சளியும் வெளியே வராது. எனவே அவர்களுக்கு இருமல், சளித் தொந்தரவுகள் இல்லையென்று முடிவு கட்டிவிடக்கூடாது. மார்பத்தசைகள் எல்லாம் சுருங்கி, ஒடுங்கி இருப்பதால் அவர்களால் இழுத்து மூச்சுவிடவும் முடியாது. இந்தச் சமயத்தில் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பது நல்லது.
வயதானவர்களுக்கு மருந்துகள் அனைத்தையும் ரத்தநாளம் மூலம் செலுத்த வேண்டும். மாத்திரைகளும், திரவ மருந்துகளும் பயனற்றவை. வயதானவர்களக்க எலும்புருக்கி நோய் கூட வெளியில் உடனே தெரிவதில்லை. எக்ஸ்ரே மூலம்தான் கண்டு பிடிக்க இயலும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் நோய், குளிர்காலத்தில் அவர்களைத் தீவிரமாகத் தாக்குகிறது. வயதான காலத்தில் நோய் தடுப்புச் சக்தி குறைந்து போகிறது. இக்காலகட்டத்தில் வயதானவர்கள் உணவு, உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குளிரைத் தாங்கக் கூடிய (ஸ்வெட்டர்) உடைகளை அணிய வேண்டும். இறை வழிபாட்டில் ஈடுபடுவது மிகவும் நலம் பயக்கும்.
குளிர்காலத்தில் குதறி உடுக்கும் நோய்:
வயதானவர்களுக்குக் குளிர்காலத்தில் கோழை அதிகரித்துக் கும்மாளடிக்கும். லொக் லொக் என்று இருமிக்கொண்டே இருப்பார்கள். அப்போது, அரத்தை, திப்பிலி, சுக்கு, மிளகு, தாளிசபததிரி ஆகியவைகளைப் பொடி செய்து வைத்துக் கொண்டு அரை தேக்கரண்டி சூரணத்துடன் தேனைக் குழைத்து, காலை, இரவு உணவிற்குப்பின் சாப்பிடவும்.
நாட்டு மருந்துக் கடையில் பொடி செய்து விற்பனைக்கு வைத்திருப்பார்கள். அனைத்தையும் சம அளவு எடைடயில் ஒன்றாகக் கலக்கி வைத்துக் கொள்ளவும். இந்தச் சூரணம் கோழையை வெளிப்படுத்தி இருமலை நிறுத்திவிடும். கொள்ளு ரசம், மிளகு ரசம் வைத்துக் குடிக்கலாம். சாதத்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்.
வயதானவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல்:
குளிர்காலத்தில் மலச்சிக்கல் ஏற்பட்டுத் துன்பப்படுவார்கள், வயதானவர்கள். அவர்கள் உண்ணும் உணவு, ருசியானதாக மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். இவற்றுடன் நார்ப்பொருள்களும் மிகுதியாக இருக்க வேண்டும். நார்ப் பொருள்கள் எந்த அளவுக்கு மிகுதியாக இருக்கிறதோ, அந்த அளவுக்க உடல் ஆரோக்கியத்துடன் திகழும்.
மேலும் நார்ப் பொருள்கள் மலச்சிக்கலை நார் நாராகக் கிழித்து வெளியே கொண்டு வந்து தள்ளிவிடும். உடலில் உள்ள வாயு வெளியேற நார்ச்சத்து உதவுகிறது. பொதுவாக நார்ப்பொருள்கள் உள்ள உணவை உண்ணும்பொழுது கடித்து மெல்ல அதிக நேரம் ஆகும். அப் பொழுது நம் வாயில் மிகுதியாகச் சுரக்கும் உமிழ்நீர் அமிலத்தோடு கலந்து வாயைச் சுத்தப்படுத்துகிறது.
மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைந்து கொழுப்பை மலத்துடன் வெளியேற்ற உதவுகிறது. எனவே வயதானவர்கள் நார்ப் பொருள்கள் மிகுதியாக உள்ள பழங்கள், காய்கறிகள், கோதுமை, கொண்டைக்கடலை, பீன்ஸ், முருங்கைக் காய், நெல்லிக்காய், திராட்சை, மாதுளை, கொய்யா, விளாம்பழம், கறிவேப்பிலை, தினை, சாமை, அவரை, பொதினா, கீரைகள் ஆகியவைகளை உண்ண வேண்டும்.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பழங்களைத் தவிர்க்கலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தைத் தண்ணீரில் இரவில் ஊறப்போடவும். காலையில் எழுந்ததும், வெந்தயத்தைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீரையும் பருகவும். வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலை அது எளிதில் உடைத்துவிடும்.
நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடக்கூடாது:
வயதானவர்கள் குளிர்காலத்தில் நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். வயதானவர்களில் சிலர் வெளியில் சென்று முறுக்கு, தட்டை வடை, எ,ள்ளுருண்டை, கடலை உருண்டை, மிக்சர், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்து, தங்கள் கட்டிலுக்கடியிலோ, தலையணைக்கு அடியிலோ மறைத்து வைத்துவிடுவார்கள்.
மகன் அலுவலகத்திற்கும், மருமகள் அரட்டை அரங்கத்தில் கலந்து கொள்வதற்காகப் பக்கத்து வீட்டுக்கும், பேரன் பேத்திகள் பள்ளிக் கூடங்களுக்கும் சென்ற பின்னர், ஒளித்து வைத்த நொறுக்குத் தீனிகளை எடுத்து ரசித்துச் சாப்பிடும் அழகை, எப்படி வர்ணிப்பது!
நொறுக்குத் தீனி சாப்பிட்டால், செரிமானம் ஆவது கடினமாகிவிடும். அதன்பின் பல தொல்லைகள் ஏற்படும். பிணி அவர்களைப் பாடாய்ப் படுத்திவிடும்.
கடும் குளிரிலிருந்து எப்படி தப்புவது?
குளிர்காலத்தில், இரத்தத்தை உறைய வைக்கும் குளிர், செவிகளையும் தாக்குகிறது. எனவே வயதானவர்கள் தங்கள் காதுகளில் பஞ்சை வைத்து அடைத்து, மப்ளரால் தலையைச் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும். கெட்டியான சால்வையை உடம்பில் போர்த்டிதக் கொள்ள வேண்டும்.
வீட்டுக்குள் இருந்தாலும் வயதானவர்கள், ரப்பர் செருப்பு அணிந்திருப்பது மிகவும் நல்லது. படுக்கையில் இருந்தபடி நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், கதைகள் படிக்கலாம். காதுக்கு இனிமை தரும் மெல்லிசையைக் கேட்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். கிரிக்கெட் விளையாட்டில் மூழ்கிவிடலாம்.