.

Wednesday, November 12, 2014

உங்க தலைமுடி அதிகமா உதிர்கிறதா?



பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம்.

ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும்.


உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக தலைமுடி உள்ளது. உடலில் விட்டமின் பி, இ, இரும்பச் சத்து, கால்சியம் போன்றவைக் குறைவதையே தலைமுடி உதிரல் காட்டுகிறது.

நீரிழிவு, பொடுகு போன்றவை அதிகமாக முடி உதிரக் காரணமாக அமையலாம். சில மருந்துகளின் பக்க விளைவாலும், சிகிச்சைகள் காரணமாகக் கூட தலை முடி உதிரலாம்.

தலை முடி சுத்தமில்லாமல் இருப்பது, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டீஷனர் காரணமாகக் கூட தலைமுடி உதிரலாம். அடிக்கடி டிரையர் உபயோகிப்பது, அழுத்தமாக சிகை அலங்காரம், அயர்னிங் போன்றவையும் தலைமுடி உதிரக் காரணமாகலாம். அதிகமான மன அழுத்தம் கூட முடி உதிரக் காரணமாக இருக்கும். இதற்கு யோகா போன்ற தியானங்கள் பலனளிக்கும்.

பொதுவாக தலைமுடி உதிர்ந்து போன பிறகு அதற்காக சிகிச்சை செய்வதை விட, தலைமுடி நன்றாக இருக்கும் போதே அதனை சரியாக கவனித்தால் வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

எப்போது ஷாம்புவோ அல்லது எண்ணெயையோ தலைக்கு வைக்கும் போது தலையில் இருந்து ஆரம்பித்து தடவுங்கள்.

தலைமுடியின் நுனிப் பகுதியை அவ்வப்போது வெட்டி விடுங்கள். இதனால் தலைமுடி நுனி உடைவது தடுக்கப்படும்.

தலைக்கு தடவும் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதனை தலையில் தேய்த்து லேசாக மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்வதால் தலைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

அதிகமாக தண்ணீர் பருகினால் சருமப் பிரச்னைகள் குறையும். இதனால் தலைமுடி உதிர்வது கட்டுப்படும்.

சரியான தூக்கம் எந்த அளவிற்கு உடலுக்கு அவசியமோ அதே அளவிற்கு தலைமுடிக்கும் தேவைப்படுகிறது.

அதிகமாக தலை முடி உதிர்பவர்களுக்கு...

இளநீர் தண்ணீரை அல்லது தேங்காப் பால் கொண்டு தலை முடியைக் கழுவுங்கள்.

தயிர் அல்லது டீ டிக்காஷனை தலைக்கு குளிக்கும் போது தலை முடிக்கு போட்டு தேய்த்துக் குளிக்கலாம்.

கறிவேப்பிலையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் இருக்கும் தலைமுடிக்கு அதிகமாக பலம் கிடைக்கும்.

இதற்கு மேலும் தலைமுடி உதிர்ந்தால் அது உங்கள் பரம்பரை சார்ந்த விஷயமாக இருக்கலாம்
Disqus Comments