.

Saturday, October 25, 2014

உடல் வியர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

உடல் வியர்ப்பதால்



வியர்ப்பது என்பது ஒரு இயற்கையான நிகழ்வே. எப்போது மிகவும் கடினமாக வேலை செய்கிறோமோ, அப்போது உடலானது அதிக அளவில் வெப்பமடைந்து, உடலில் இருந்து வியர்வையானது வெளியேறும். இதற்கு முக்கிய காரணம், மூளையில் உள்ள ஹைபோதலாமஸ். எப்படியெனில் உடலானது அதிக அளவில் வெப்பமடையும் போது, மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் உடலுக்கு ஒருவித தகவலை அனுப்பும். இதனால் தான் உடலை குளிர்விக்க வியர்வையானது வெளியேறுகிறது.

அது எப்படி உடல் குளிர்ச்சி அடைகிறது என்று பலர் கேட்கலாம். எப்படியென்றால், பொதுவாக வியர்வையில் நீர் மற்றும் சிறிது அம்மோனியா போன்ற கெமிக்கல்கள் கலந்திருக்கும். இந்த கெமிக்கல்களானது சருமத்தில் இருந்து நீராவியாகி, குளிர்ச்சியடையச் செய்கிறது.

இப்படி வியர்வை வெளியேறுவதால் ஒரு தீமையும் உள்ளது. அது என்னவெனில் உடலில் நீர்ச்சத்தின் அளவானது குறையும். ஆகவே அதிகம் வியர்ப்பவர்கள், அவ்வப்போது தவறாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்போது வியர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

சுத்தமான சருமம்

உடலில் அதிகம் வியர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று, சருமம் சுத்தமாக இருக்கும். எப்படியெனில் வியர்க்கும் போது சருமத்துளைகளானது திறக்கப்பட்டு, அதில் இருந்து பாக்டீரியாக்களானது வெளியேறும். ஒருவேளை உங்களுக்கு வியர்க்காவிட்டால், சருமத்துளைகளில் பாக்டீரியாக்களானது தங்கி, அவை பிம்பிளை உருவாக்கும். எனவே வேலை செய்து வியர்த்தால், அப்போது முகத்தை குளிர்ந்த நீரில் ஒருமுறை கழுவி, சுத்தமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

------------------------------------

உடலானது சுத்தமாகும்

உடலானது இரண்டு வழிகளில் சுத்தமாகும். அதில் ஒன்று, சிறுநீர் அல்லது கழிவுகளை கழிக்கும் போது, மற்றொன்று வியர்க்கும் போது உடலில் இருந்து டாக்ஸின்களானது வெளியேறும். எனவே உங்களுக்கு வியர்வை அதிகம் வெளியேறினால், கவலை கொள்ளாதீர்கள், வியர்ப்பது நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

------------------------------
புத்துணர்வான மனநிலை

உடற்பயிற்சி செய்து வியர்வை வெளியேறிய பின்னர் புத்துணர்வுடன் இருப்போம். அதற்கு முக்கிய காரணம் வியர்வை வெளியேறுவதால், உடலை மந்தமாக வைத்துக் கொண்ட நச்சுக்கள் வெளியேறிவிடுகிறது. இதனால் நாம் புத்துணர்வு அடைவதுடன், அப்போது நமது மூளை நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

நோய்த்தொற்றுக்களை சரிசெய்யும்

உங்களுக்கு சளி, காய்ச்சல் போன்றவை இருந்து தொந்தரவு தருகிறதா? அப்படியெனில் அதனை போக்க சிறந்த சிகிச்சை வியர்வை வெளியேறுவது தான். ஏனெனில் வியர்வையில் உள்ள கெமிக்கல்களானது கிருமிகளை எதிர்த்து அழிக்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது ஆய்வு ஒன்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------
சிறுநீரக கற்களை குறைக்கும்

நன்கு வியர்வை வெளியேறுவதால், சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்புகளானது குறையும். பொதுவாக சிறுநீரக கற்களானது சிறுநீரகத்தில் உப்பு மற்றும் கால்சியம் அதிக அளவில் தங்குவதால் ஏற்படும். ஆனால் வியர்ப்பதன் மூலம் உப்பானது வெளியேறுவதுடன், கால்சியமானது எலும்புகளில் தங்கிவிடும். மேலும் அதிகம் வியர்க்கும் போது தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். இதனால் தண்ணீர் அதிகம் குடிப்போம். இதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
Disqus Comments