.

Monday, October 20, 2014

இருமல் சளி காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்

இருமல் சளி  காய்ச்சல்


சளி,கபம், நெஞ்சு சளி,  குணமாக

வேப்பிலையுடன் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் தடவிவர சளி சரியாகும்
தூதுவளை, ஆடாதோடா, கண்டங்கத்திரி இலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கஷாயம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட, நாள்பட்ட கட்டிய சளியும் கரையும்.
கருந்துளசியை  பிழிந்து, சாரு எடுத்து, தினமும் காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட சளி – கபம், மார்பு சளி குணமாகும்.
ஆடாதோடா இலையை போடி செய்து தேன்கலந்து தினமும் சாப்பிட்டு வர, இருமல் சளி நிற்கும்

கடுக்காய் பொடியுடன் நெல்லி பொடியையும் கலந்து தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம் நீங்கும்.
குழந்தைகள் சளியினால் மூச்சு விட சிரமபட்டால், சிறிது தேங்காய் எண்ணெய் மூக்கில் தடவிட, சிரமம் குறையும்
அமுக்கிராங்கிழங்கு பொடி செய்து, தினமும் இரவில் பாலுடன் சாப்பிட்டு வந்தால்,கபம் போகும்
தூதுவளை ரசம் அல்லது தூதுவளை சூப் குடித்தால் சளி போய்விடும்
தேங்காய் எண்ணையை  கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவினால், நெஞ்சு சளி குணமாகும்.
ரோஜா பூவை முகர்ந்து பார்த்தல் மூக்கடைப்பு நீங்கும்
அருகம்புல் சாரு சளிக்கு மிகவும் நல்லது.
மாதுளம் பழம் சளிக்கு மிகவும் நல்லது. மாதுளம் பழச்சாறை எலுமிச்சம் சாருடன் கலந்து சாப்பிட்டால் சளி சரியாகும்.
கற்பூரவள்ளி இலையை சூடாக்கி, நெற்றியில் பற்று போட்டால், நெற்றியில்
கோத்திருக்கும் நீர் வெளியேறும்
காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்

நிலவேம்பு குடிநீர் அணைத்து விதமான காய்ச்சலையும் குணபடுத்தும்.
ஈர பசையுடன் உள்ள வேப்பமர பட்டையை இடித்து அதில் கால் பங்கு சீரக பொடியுடன் பசும்பாலில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
திப்பிலியுடன் , குப்பைமேனி செடியை பொடிசெய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் சரியாகும்
துளசி, வில்வ இலை, வெப்ப இலை, சந்தனம், கடுக்காய், மிளகு, சிற்றரத்தை ஆகியவை பொடியாக அரைத்து காயவைத்து கொண்டால், காய்ச்சல் வரும் சமயம் 1 தேக்கரண்டி வென்னீரில் கலந்து காலை மாலை குடித்து வர, சுரம் குணமாகும்
வேப்பிலையை வறுத்து  அடியில் வைத்து படுத்தால், சுரம் போய்விடும்.
உத்தாமணி-வல்லாரை இலைகளை மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால், காய்ச்சல் சரியாகும்.
சளி இருமல் குணமாக சித்த வைத்தியம்

சீரகத்தை வறுத்து பொடிசெய்து, கல்கண்டுடன் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
பொன்னாரை விதையை பசும்பால் விட்டு நன்றாக அரைத்து குழந்தைக்கு கொடுத்து வர, கக்குவான் இருமல் சரியாகும்.
நாட்பட்ட இருமல் நிற்க, முற்றின வெண்டைக்காயை சூப் பண்ணி சாப்பிட்டால், சிறிது சிறிதாக குணம் ஆகும்
சுக்கு மிளகு திப்பிலி சம அளவில் கலந்து போடி செய்து தினமும் 3 வேலை தேனுடன்  கலந்து சாப்பிட தொண்டை வலி சரியாகும்.
மூச்சிறைப்பு குணமாக சித்த வைத்தியம்

விஷ்ணுகிராந்தி பொடியை வென்னீரில் கலந்து சாப்பிட்டால், சளியினால் வரும் மூச்சிறைப்பு  சரியாகும்.
கரிசலாங்கண்ணி இலையை அரிசி திப்பிலியுடன் பொடி செய்து சாப்பிட, கபத்தினால் வரும் மூச்சிறைப்பு சரியாகும்.
Disqus Comments