.

Saturday, September 13, 2014

தோள்பட்டை வலிக்கு தீர்வு என்ன?

தோள்பட்டை வலி

மனிதனின் உடல் அமைப்பில் வலிமையின் அடையாளமாக இருப்பது தோள்கள். மனிதனின் அதிக எடை தாங்கும் பகுதி தோள்பட்டை தான் என்றால் அதில் மாற்றுக்கருத்து கிடையாது. எந்தச்சுமையும் சுமக்கும் சுமைதாங்கி தோள்பட்டை ஆகும். தோள்களின் இயக்கத்தில் முதலில் பாதிப்பது கைகள்தான். தோள்பட்டை வலி, எலும்பு முறிவு போன்றவை முன்பெல்லாம் கவலைக்கும் பீதிக்கும் உரியவையாக இருந்தன. இப்போது நவீன மருத்துவ முன்னேற்றத்தால் எவ்வித தோள் பிரச்னைகளுக்கும் சிகிச்சை உள்ளன. தோள்பட்டை வலி யாருக்கு வேண்டுமானலும் வரலாம்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தோள் சம்பந்தமான பிரச்னைகள் வரும். சர்க்கரை நோயால் தசைகள் இறுகி தோள்பட்டை மூட்டுகள் இறுக்கப்பட்டு வலி உண்டாகும். இளைஞர்களுக்கு அடிப்படுதல், கீழே விழுதல் போன்றவற்றாலும் இந்த வலி வருகிறது. பக்கவாதம் வந்தவர்களுக்கும் இந்த பாதிப்பு வரும். அறிகுறிகள் கழுத்து பகுதியில் வலி ஏற்படும் . அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தால், அல்லது நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது மரத்து போய் (உணர்வற்ற நிலை) கை, மற்றும் கால்கள் எந்தவித அசைவின்றி காணப்படும் சுண்டு விரல் செயலிழந்து போகும். மனஅழுத்தம் உண்டாகும்.

தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.கண் எரிச்சல் உண்டாகும். எழுதும் போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும் போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும், தலைசுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும் போது தலை சுற்றல் உண்டாகும். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கறுத்துப்போய் பட்டை, பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்து பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்து பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். உடற்பயிற்சிகள், சாதாரணமாக 7 முதல் 8 மணி நேரம் வரை கணினியில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து வெளியில் சென்று நடந்து வருவது அவசியம். அத்துடன் தோள்பட்டைக்கு ஏதுவான நாற்காலியை பயன்படுத்த வேண்டும்.

காலையில் அல்லது மாலையில் நடைப்பயிற்சி செய்யும் போது, கையை முன் பின்னாகச் சுழற்றலாம். இதனால் தோள்பட்டைக்கு கூடுதல் பயிற்சி கிடைக்கும். இது தவிர யோகா, சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக சூரிய நமஸ்காரம் செய்யும் போது தோள்பட்டைக்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்கிறது. உணவுபொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் ஜீரணமாக கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
Disqus Comments