.

Wednesday, September 10, 2014

உடல் எடையை விரைவாக குறைக்க முற்படும்போது ஏற்படும் எதிர்விளைவுகள்.....

உடல் எடையை விரைவாக

தற்போது உடல் எடையால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆகவே அனைவரும் விரைவில் எடையை குறைக்க விரும்புகிறார்கள். அதிலும் பண்டிகை காலத்தில் விருந்து பலகாரம் சாப்பிட்டு, எடை கூடிய பிறகு, புத்தாண்டில் எடையை குறைக்க தீர்மானம் செய்வார்கள். அப்போது 30 நாட்களில் எடையை குறையுங்கள்' என்கிற விளம்பர சுவரொட்டி கவனத்தை ஈர்க்கும்.

அந்த நேரத்தில் விரைவாக எடையை குறைக்கும் பேராசையில் சிக்கிக் கொள்வது மிகவும் சுலபம். ஆனால் இதனால் இழக்கப்போவது என்ன? விரைவான தீர்வுகள் ஆரோக்கியத்திற்கு உலை வைத்து விடக் கூடும். உடல் நலக்கேடுகளை பொருட்படுத்தவில்லை என்றாலும், அவை மன அழுத்தத்தையும், மனச்சோர்வையும் கூட ஏற்படுத்துகின்றன.

ஆகையால், எந்த ஒரு விரைவான எடை குறைப்பு முறையையும் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, விரைவாக எடையை குறைப்பதினால் ஏற்படும் தீங்குகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய தீங்குகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, விரைவில் எடை குறைக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுங்கள்.
நிரந்தர தீர்வு அல்ல

விரைவாக எடை குறைக்கும் முறைகளை ஏற்றுக்கொள்ளும் முன்பு மிகவும் எச்சரிககையாக இருக்க வேண்டும். சிறிதளவு எடையை குறைக்க அவை உதவினாலும், அதன் விளைவுகள் நீண்ட காலத்திற்கு ஏற்றவையாக இருக்காது. தற்காலிக மாற்றங்களை ஏற்றுக் கொள்ள உடல் பயிற்சி பெறாததால், மாற்றங்களை அது ஏற்றுக் கொள்ளாமல், இழந்த எடையை முற்றிலுமாக அது திரும்ப பெற்றுவிடும்.

நீர்ச்சத்தை இழக்கச் செய்யும்

உடலில் இருக்கும் நீரை இழக்கச் செய்வதன் மூலமாகவே பிரபலமான எடை குறைப்பு உக்திகள் செயல்படுகின்றன. உடலின் பெரும்பாலான பகுதி நீர் என்பதால், பலர் எடையை குறைக்க நீரை வெளியேற்றுகிறார்கள். இது முற்றிலும் போலியான மற்றும் தீமையான உக்தி ஆகும். முற்றிலும் நீர் இன்றி வாழ்வது ஆரோக்கியமானது அல்ல. மயக்கம் அடைதல், தலைசுற்றல், சோர்வு, இருதய படபடப்பு போன்ற மோசமான பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும். சில சமயங்களில், இது தசை பழுது மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். மேலும், இயற்கையாகவே உடலானது நீரை உறிஞ்சும் தன்மை உடையது என்பதால், விரைவில் பழையை எடையை பெற்றுவிட நேரிடும்.

குறைவான தூக்கம்

விரைவான எடை குறைப்பு, விரைவாக சோர்வு அடையச் செய்து, சரியான தூக்கத்தை கூட பெற முடியாத நிலை ஏற்படும். மேலும் எடையை குறைப்பதற்கு டயட்டைப் பின்பற்றும் போது, பலர் உணவில் இருக்கும் கொழுப்பை எரிப்பதற்கு பதிலாக, உணவில் இருக்கும் கலோரிகளை குறைத்து விடுகின்றனர். குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்வதால், ஆக்கச்சிதைவு விகிதம் குறைந்துவிடுகின்றது. இதன் மூலமாக ஆற்றல் குறைந்து, மேலும் சோர்வு அடையச் செய்கின்றது.

பித்தகற்கள் உண்டாதல்

வயிற்றில் பித்தப்பை இருக்கின்றது. இது கல்லீரலுக்கு கீழ் இருக்கும் ஒரு சிறு பை. தேவைப்படும் வரை கொழுப்பை சேகரிக்க பித்தப்பை உதவுகின்றது. விரைவாக எடையை குறைப்பது, பித்தக்கற்களை உருவாக்கும். கற்களை போல காட்சியளிக்கும் கெட்டியான கொழுப்புதான் பித்தக்கற்கள். இந்த சிறிய கற்கள் மோசமான சேதங்களை ஏற்படுத்தக்கூடும். பித்தப்பையில் இருந்து சிறுகுடலுக்கு செல்லும் பித்த நீரின் இயல்பான ஓட்டத்தை இது தடுப்பதால் நோய் பாதிப்பு ஏற்படும்.

ஊட்டச்சத்து குறைபாடு

விரைவாக எடையை குறைக்கும் முறையை பின்பற்றும் போது, ஒரு சில உணவுகள் மட்டுமே உண்பதற்கு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த கட்டுப்பாட்டின் காரணமாக, உடலையும், அதனை நலமாகவும் வைத்துக் கொள்ள தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை குறைந்துவிடுகிறது.
மன அழுத்தத்தின் அளவை அதிகரிக்கும்

எடையை குறைப்பதற்காக சில உணவுகளை தவிர்ப்பதும், பட்டினியாக இருப்பதும், ஆக்கச்சிதைவு விகிதத்தை குறைக்கின்றது. மேலும் இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனான கார்டிசாலையும் அதிகரிக்கின்றது. இந்த ஹார்மோன் அதிகமாக இருப்பதால், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அழுத்தத்தையும், இழப்பையும் உணர நேரிடும்.

முடி உதிர்தல்

எடை குறைப்பு பயணத்தை தொடங்கும் போது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழப்பதால், கூந்தல் ஆரோக்கியமாக வளர புரதங்கள் தடைபடுகிறது. இவ்வாறு புரதங்கள் தடைபடுவதால், அந்த குறைபாடு கூந்தலை உலர்வாகவும், உடைந்து போகும் படியாகவும், உதிர்ந்து போகவும் செய்கின்றது.

கொழுப்பு சேகரிப்பு

எடையை குறைப்பதற்காக பட்டினி கிடக்கும் போது, உடல் தனக்கே செய்கை காட்டி, உணவை சேகரித்துக் கொள்கின்றது. இந்த பிரச்சனையின் காரணமாக, சாதாரண உணவுக்கு திரும்பும்போது, பழைய எடையை பெற்றுக் கொள்வது மட்டுமல்லாமல், அதிகமான தேவையற்ற எடையையும், கொழுப்பையும் சேர்த்து பெற்றுக் கொள்ள நேரிடுகிறது.

ஆக்கச்சிதைவு தகர்வு

எடை குறைப்பில் ஈடுபடும் போது, அவை நிலைத்து இருப்பதற்காக மேற்கொள்ளும் செயல்களால், ஆக்கச்சிதைவு விகிதமானது குறைகிறது. ஆனால், மீண்டும் சாதாரண உணவு பழக்கத்திற்கு திரும்பும் போது, மெதுவான ஆக்கச்சிதைவு விகிதத்தின் காரணமாக எடை கூடுவதை உணர்வீர்கள். மேலும் இதை தடுப்பதற்காக, மீண்டும் பத்தியத்தில் ஈடுபட வைக்கும். இவ்வாறு உடலானது எடை குறைத்தல் மற்றும் கூடுதல் சுழற்சியில் ஈடுபடும். அடிக்கடி ஏற்படும் இந்த மாற்றம் ஆக்கச்சிதைவு விகிதத்தை தகர்த்து, உடலையும் சேதப்படுத்தும்.

பல்வேறு உடல்நலக் கேடுகள்

உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டினால், தசை பலவீனம், இரத்த சோகை, மலச்சிக்கல் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் உடனடியாக சோதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், அவை ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
Disqus Comments