.

Friday, September 26, 2014

லிப்ஸ்டிக் போடுவது எப்படி!

லிப்ஸ்டிக் போடுவது எப்படி

லிப்ஸ்டிக் போடுவது உதடுகளில் எழுதும் கவிதை போன்றது. அதை ரசித்துச் செய்ய வேண்டும். இப்படி...!

* முதலில் கவனிக்க வேடியது லிப் லைனர் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றைத்தான். லிப்ஸ்டிக் குச்சி உங்கள் உதடுகளுக்கு ஏற்ப குவிந்தோ, உருண்டை வடிவமாகவோ இருக்க வேண்டும். அது லிப்ஸ்டிக் பூச வசதியாகவும், சாயம் எல்லா இடங்களிலும் பரவ வசதி யாகவும் இருக்கும்.

* லிப்ஸ்டிக் போடும் எல்லையைக் குறிக்க கோடு வரைய பயன்படும் லைனர், நீங்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் நிறத்திற்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

* கோடு வரைந்த பின் லிப்ஸ்டிக் பூசும்போது முழுமையாக கோடு மறையும் அளவிற்கு நன்றாக வண்ணம் பூசிவிடுங்கள்


* லிப்ஸ்டிக் பலவிதங்களில் கிடைக்கிறது. பளபளப்பு மிகுந்த, பளபளப்பு குறைந்த, பாலாடை படிந்தது போன்ற, உறைபனி மூடியது போன்றவை அவைகளில் குறிப்பிடத்தக்கவை. நீங்கள் விரும்பியதை வாங்கி பயன்படுத்தலாம்.


* ஒரே நேரத்தில் இரு தடவை லிப்ஸ்டிக் பூசுவது, உதட்டுச் சாயத்தை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்யும். இப்படிச் செய்ய விரும்பினால் முதலில் சாயம் பூசிய ஒரு நிமிடத்தில் மெல்லிய பேப்பரால் லிப்ஸ்டிக் மீது ஒற்றி எடுத்துவிட்டு அதன்மேல் மீண்டும் பூசுங்கள்.

* உதட்டுச் சாயத்திற்கு மேலாக லிப் கிளாஸ் எனப்படும் மெல்லிய கண்ணாடித் தாளை ஒட்டிக் கொள்ளலாம்.

* லிப் கிளாஸ் உதட்டை புடைபாகக் காட்டும். எனவே இயல்பாகவே தடித்த உதடுகள் கொண்டவர்கள் லிப்-கிளாசை தவிர்க்க வேண்டும்.

* முகத்தில் மெல்லிய புன்னகைடன் இளம்சிவப்பாக இருக்கும் உதடுகள் பலரையும் ஈர்க்கும். உதடுகள் வளமாக இருந்தால்தான் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

* காதல் உணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் உதடுகளுக்கு முக்கியபங்கு உண்டு. ஒரு உண்மை சொல்ல வேண்டுமானால் உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் உங்களுக்கும், கணவருக்குமான நெருக்கம் கூட குறையலாம். எனவே உதடுகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

* உதடுகள் உலர்ந்து போவதுதான் பலரது பிரச்சினையாக இருக்கிறது. போதிய ஊட்டச் சத்துக்கள் கிடைக்காததால் உதடுகள் வறண்டு போகும். காய்கறிகள், வைட்டமின் உணவுகளை சரியாகச் சேர்த்து வந்தால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும்.

* உதடுகள் உலர்ந்துபோனால் பலரும் நாக்கால் வருடி ஈரமாக்கிக் கொள்கிறார்கள். இது தவறானதாகும்.

* உதடுகள் அடிக்கடி வறண்டு போவதாக உணருபவர்கள் அதற்கான கிரீம், ஜெல்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

* இயல்பிலேயே உதடுகள் அழகு குறைந்தும், ஒழுங்கற்றும் இருப்பவர்களுக்கு `லிப் ஆக்மென்டேசன்' சிகிச்சை இருக்கிறது. அறுவைச் சிகிச்சையான இதை மேற்கொள்வதன் மூலம் அழகான உதடுகளை பெறலாம்.

* உதடுகளில் ஓவியம் வரைந்து அழகுபடுத்தும் `லிப் டாட்டூ' முறையிலும் உதடுகள் அழகுபடுத்தபடுகின்றன. ஆனால் இது ஆப்பிரிக்க நாட்டில் பிறந்து பழமையாகிபோன முறையாக இருக்கிறது. விரும்புபவர்கள் டாட்டூ வரைந்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.
Disqus Comments