- ரத்த அழுத்தம் 130/80 என்ற சராசரி நிலைக்கு மேல் இருந்தால்
- சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் இருந்தால்
- கொழுப்பு 200 விரீ/ஞிலி என்ற சராசரி கணக்கைவிட அதிகம் இருந்தால்
- குடும்பத்தில் உள்ளோருக்கு பாரம்பரியமாக இதய நோய் இருந்தால்
- புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால்.. (இதயநோய் வராவிட்டாலும் புற்றுநோய் வந்து விடும்)
- முழுநேரமும் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால்
- வாரத்திற்கு 3 தடவைகூட உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால்
- உடல் எடை மிக அதிகமாக இருந்தால்
- மன அழுத்தம் நிறைந்த வேலையில் வருடக் கணக்கில் தொடர்ந்தால்
- தாங்க முடியாத துக்கம், இழப்பை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்தால்
… இப்படிப்பட்ட காரணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை அதிகம். ஆண்கள் 40 வயதை தாண்டும்போதும், பெண்கள் 45 வயதை தாண்டும்போதும் இதில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.