.

Tuesday, September 2, 2014

இது இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களுக்காக ..........

இது இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களுக்காக

கேட்காமலேயே இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று முதுகு மற்றும் கழுத்து வலியை சொல்லலாம். பல  வருடங்களாக வண்டி ஓட்டுபவர்களுக்கு கண்டிப்பாக இது போன்ற பிரச்சனை ஏற்படும் என்கிறார் முதுகுத்தண்டு மற்றும் எலும்பு நிபுணர் டாக்டர்  ஹரிஹரன்...

முதுகுவலிக்கு முக்கியமான காரணம் இரண்டு சக்கர வானகம் மட்டுமல்ல, நாம் பயணிக்கும் சாலைகளும் தான். சாலைகளை அரசாங்கம் சீரமைக்க  வேண்டும். ஆனால் நம்மை நாம் தானே சீராக்கி கொள்ள வேண்டும். அதற்கு வாகனம் ஓட்டும்போது பல விஷயங்களை கவனத்தில் வைக்க  வேண்டும். வேகமாக செல்வது, திடீரென்று பிரேக் படிப்பது, சாலையில் வளைந்து செல்வது ஆகிய விளையாட்டுகள் எல்லாம் சில காலம் த்ரிலிங்காக  இருக்கும். ஆனால் இதுபோன்ற சாகசங்களே பிற்காலத்தில் வாகனம் ஓட்ட முடியாத அளவுக்கு கொண்டு போய்விடும் என்பதை நினைவில் கொள்ள  வேண்டும்.

எனவே வாகனம் ஓட்டும்போது சீராக ஒரோ வேகத்தில் செல்ல வேண்டும். திடீரென்று பிரோக் பிடிக்கும் போது உடலுக்கு அதிக வலு கொடுப்பதால்  தோள் பட்டை மற்றும் கழுத்தில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்படும். இது நாளடைவில் கழுத்து மற்றும் தோள் பட்டை வலிகளுக்கு அழைத்து  செல்லும். கழுத்து வலி ஏற்பட மற்றொரு காரணம் நாம் அணியும் ஹெல்மெட். இது கழுத்து மற்றும் முதுகுத்தண்டு இணையும் இடத்தில்  அழுத்தத்தை ஏற்படுத்துவதால் கழுத்து வலி ஏற்படுகிறது.

எனவே அதிக எடையுள்ள ஹெல்மெட்டை அணியக்கூடாது. முதுகுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமானது இரண்டு சக்கர  வாகனத்திலுள்ள சீட்டின் அமைப்பு. பொதுவாக வாகனத்தின் சீட் அகலமாக இருக்க வேண்டும். இதனால் பின்புறம் உள்ள தசைகள் முதுகுத்தண்டு  எலும்புக்கு அதிர்வு ஏற்படாமல் பாதுகாக்கும் அதேபோல் வண்டியில் பயணம் செய்யும் போது நிமிர்ந்து உட்கார வேண்டும்.

முன்னால் குனிந்து வண்டியை ஓட்டக்கூடாது. வண்டியின் கைப்பிடி நம் கையின் நீளம் இருக்கவேண்டும் என்று சொல்லும் டாக்டர் ஹரிஹரன்,  கழுத்து, முதுகு, தோள்பட்டை, தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளையும் பட்டியலிட்டுள்ளார்.

கழுத்தை நேராக வைத்துக்கொண்டு முதலில் பின்புறமாக சாய்க்க வேண்டும். அடுத்து முன்புறமாக நன்கு குனிய வேண்டும்.. அவ்வாறு செய்யும்  போது தாடை பகுதி தொண்டைக்குழியை தொடவேண்டும். பிறகு வலது, இடது புறமாக திரும்ப வேண்டும். இதை தினமும் பத்து முறை செய்ய  வேண்டும். இது கழுத்து தைகளை வலுப்படுத்தும். கழுத்து வலி உள்ளவர்கள் தொடர்ந்து இப்படி செய்து வந்தால் கழுத்த வலி குணமாகும்.

தரையில் படுத்து மூச்சை நன்கு உள்ளிழுத்து வலது காலின் முட்டி நெஞ்சுப்பகுதிக்கு வரும் வரை மடக்கவேண்டும். பிறகு இடது கால் முட்டி  நெஞ்சுப்பகுதியில் படுமாறு செய்ய வேண்டும். அடுத்து இரண்டு கால்களையும் சேர்த்து மடக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முதுகுத்தண்டு  வலுப்படும்.
Disqus Comments