அநியாயத்துக்கு முடி நரைக்குதே என்று கவலைப்படுபவர்களுக்கான நிவாரணி இந்த ஓம எண்ணெய்... பச்சை கறிவேப்பிலையை அரைத்தெடுக்க விழுது 10 கிராமும், கொட்டை நீக்கப்பட்ட பெரிய நெல்லிக்காயை அரைத்தெடுத்த விழுது 10 கிராமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
கால் லிட்டர் நல்லெண்ணெயைக் காய்ச்சி, அரைத்து வைத்துள்ள விழுதுகளை அதில் போட்டு, சடசட சப்தம் அடங்கியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். கால் லிட்டர் தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி, புகை வரும்போது அடுப்பை அணைத்து, அதில் 25 கிராம் ஓமத்தைப் போடுங்கள்.
ஆறியதும் இந்த எண்ணெயோடு நல்லெண்ணெய் கலவையில் பாதியளவு எடுத்து, கலந்து வையுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர, இளநரை `விட்டால் போதும்' என்று ஓடிவிடும். அடிக்கடி தலைமுடியை கட் பண்ண பியூட்டி பார்லர் போகிறவர்கள், சொந்தமாக ஒரு கத்திரிக்கோலை எடுத்துச் செல்வது நல்லது.
`டை' போட்டவர்களுக்கு பயன்படுத்திய கத்திரிக்கோலை நமக்கு பயன்படுத்தினாலும் முடி நரைக்க ஆரம்பித்துவிடும். இருபத்தைந்து வயதினருக்கும் இளநரை வரலாம்.
ஒரு கப் கறிவேப்பிலையுடன், ஒரு கப் நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை இளம் சூடான தலையில் தேய்த்து சீயக்காய்ப் போட்டு அலசிவர, இளநரை இருந்த இடம் தெரியாது. கறிவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து, மோரில் கரைத்துக் குடிப்பதாலும் இரும்புச் சத்து கிடைத்துவிடும்.
முடி உதிர்தல் மற்றும் இளநரைக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும். தலை முடியானது, திடீரென ஏதோ ஒரு காரணத்தால் கருமை குறைந்து போகக்கூடும். இளநரைகூட எட்டிப் பார்க்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்குக் கை கொடுக்கிறது வெட்டி வேர் தைலம்.
இது முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, கருகருவெனவும் பராமரித்து, உங்கள் இளமையைத் துள்ள வைக்கும். எண்ணைய்ப்பசை அதிகமாக இருந்தால் வாரம் இருமுறை கண்டிப்பாக தலையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு தேவையானவை:-
கடலைப்பருப்பு - கிலோ
பூலாங்கிழங்கு - 100 கிராம்
வெட்டிவேர் - 25 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
இவற்றை நன்கு அரைத்துக் கொண்டு, சலித்து வைத்துக் கொள்வது அவசியம். இந்தத்தூளில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சூடான நல்ல தண்ணீரில் கரைத்து, தலைமுடியை நன்கு அலசவும்.
இது, வேர்க்கால்களில் உள்ள அழுக்கு, எண்ணெய்ப் பசையை அகற்றி தலையை நன்கு சுத்தம் செய்வதோடு, வியர்வை நாற்றத்தையும் போக்கி நல்ல வாசனையைக் கொடுக்கும்.
`கருகரு கூந்தல் இருந்தால் மட்டும் போதுமா?
விளம்பரப் படங்களில் வருவதுபோல அலைபாயும் நீண்ட கூந்தலுடன் நடை போட முடியலையே' என்று ஏங்குபவர்களா நீங்கள்? உங்களுக்கும் கை கொடுக்கிறது கடுக்காய்... 100 கிராம் பிஞ்சு கடுக்காய், 100 கிராம் முத்தின கடுக்காய்... இரண்டையும் வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள்.
இதனுடன் 20 கிராம் சுருள்பட்டை, கட் பண்ண 100 கிராம் வெட்டி வேரையும், கால் கிலோ தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து காய்ச்சி விடுங்கள். தினந்தோறும் கூந்தலுக்கு இந்தத் தைலத்தை தடவி வந்தால், `நீநீநீ...ளமாக' கூந்தல் வளர்வது நிச்சயம். கூந்தலில் மட்டுமல்ல, புருவம், கண் இமைகளிலும் இந்தத் தலைத்தை தடவலாம்.
கண் இமை, புருவ முடிகள் அடர்த்தியாக வளரத் தொடங்கும். `வீஸிங்' தொல்லை இருப்பவர்களும், பயமின்றி இந்தத் தைலத்தை பயன்படுத்தலாம். கடுக்காய்க்கு நீரை உறிஞ்சும் தன்மை இருப்பதால் சளியோ, தலைவலியோ வரவே வராது.