வீட்டின் முன்புறம் அல்லது தூய்மையான எந்த இடத்திலும் துளசிச் செடியை வளர்ப்பது புண்ணியச் செயல்.
துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடிப்பாகத்தில் சிவனும், மத்தியில் விஷ்ணுவும், இருக்கின்றனர்.
12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 லசுக்கள், அசுவினித் தேவர் இருவர் ஆகியோர் துளசி இலையில் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
துளசி இலை, மருத்துவ குணங்கள் பொருந்தியதாகும்.
விஷக்கடிக்கு துளசி அருமருந்து. துளசி செடி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் அண்டாது.
துளசி தீர்த்தம் கங்கை நீருக்குச் சமம். இவ்வளவு புண்ணியம் வாய்ந்த துளசிச் செடி ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம்.
1.துளசி இலைகளைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது.ஜிரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலைகள் மூலம் பெறலாம்.வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.நமது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம்
2. துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.
3.வியர்வை நாற்றத்தை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்
.
4.துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி , படை சிரங்குகள் கூட மறைந்துவிடும்.
5.துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வந்தால் சிறுநீ ர்க்கோளாறு மறையும் .
6.துளசி சாற்றுடன் எலுமிச்சசை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.
8. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பல நோய் களிலிருந்து காக்கிறது .
9.வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும் ,
10.வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டை சுற்றிலும் துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள், பூச்சிகள், பாம்புகள் முதலியன வராது
இதனால்தான் வீடுகளில் துளசிமாடம் வைத்து துளசி செடிகளை வளர்க்கிறார்களோ