.

Tuesday, August 26, 2014

மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்?

மாதவிலக்கு


மாதத்தில் அந்த 3 நாட்கள் மட்டும் வராமலே இருக்காதா என மிரட்சி கொள்கிற பெண்கள் பலர். காரணம், வாழ்க்கையையே  வெறுக்கச் செய்கிற அந்த  நாட்களின் வலி.  மாதவிலக்குக்கு 10-15 நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்கிற அந்த வலி, மாதவிலக்கின்  போது அதிகமாகி, முடிகிற வரை  தொடர்வதன் பின்னணி, தீர்வுகள் என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர்  ரிபப்ளிகா.

‘‘மாதவிடாய்க்கு முன் கர்ப்பப் பையில் உள்ள ரத்தக் குழாய்கள் திறந்து கொள்ளும். ரத்தப் போக்கு ஆரம்பமாகும். 3 முதல் 5 நாட் களில் மாதவிடாய்  முடிந்ததும், கர்ப்பப் பை தசைகள் சுருங்கி, ரத்தக் குழாய்கள் மூடிக் கொள்ளும். இவை எல்லாவற்றையும் கட்டுப்ப டுத்துவது ஹார்மோன்கள். அந்த  ஹார்மோன்கள் சரியில்லை என்றால் அடி வயிற்று வலி வரும். அடுத்து கர்ப்பப் பையில் கட்டிகள்  இருந்தாலும் வலி வரும். கட்டி என்றதும்  புற்றுநோய் கட்டியோ என்று பயப்பட வேண்டாம். கர்ப்பப் பையின் உள்ளே இருக்கும்  தசையானது இறுகியிருக்கும். கர்ப்பப் பையானது சுருங்க, அந்தத்  தசைகள் மென்மையாக இருக்க வேண்டும்.

அதே போல கட்டி எந்தப் பக்கம் இருக்கிறதோ, அதைப் பொறுத்து வலியின் இடமும் மாறும். கீழே இருந்தால் அடிவயிற்றிலும், கர்ப் பப் பையின்  பின்புறம் இருந்தால் முதுகுவலியும் இருக்கலாம். அடினோமையோசிஸ் என்கிற பிரச்னை இருந்தாலும் வலிக்கும். கர்ப்பப்  பை புண்ணானதன்  விளைவாக, மாதவிலக்கு நாட்களில் உருண்டு, புரண்டு துடிக்கிற அளவுக்கோ, மாதா மாதம் பிரசவ வலியை மிஞ் சும் அளவுக்கோ வலிக்கும். அடிக்கடி  வடி அண்ட் சி செய்கிறவர்களுக்கும், வருடக் கணக்கில் காப்பர் டி உபயோகிப்பவர்களுக்கும்  அடினோமையோசிஸ் வரலாம்.

பூப்பெய்திய புதிதில் முதல் ஒரு வருடத்துக்கு அதிக வலி இருப்பது சகஜம். அதையும் தாண்டித் தொடர்ந்தாலோ, கட்டிக் கட்டியான  ரத்தப் போக்கு  இருந்தாலோ கர்ப்பப் பையில் பிரச்னைகள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். புதிதாகத் திருமணமானவர்களுக்கு  முதல் சில மாதங்கள் அடி  வயிற்று வலி இருப்பது சகஜம். அவர்களுக்கு ‘டார்ச்’ என்கிற இன்ஃபெக்ஷன் காரணமாக இருக்கலாம்.  வயிற்று வலியுடன், காய்ச்சலும் சேர்ந்து  கொள்ளும். கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை இருக்கலாம். டார்ச் என்பது 2 - 3 இன்ஃபெக் ஷன்கள் சேர்ந்தது என்பதால் வலி இருப்பவர்கள் மருத்துவரைப்  பார்த்து அதற்கான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு மாதவிடாய்க்கும், இன்னொரு மாதவிடாய்க்கும் இடையிலான 13 முதல் 15வது நாளில் வயிற்று வலி வரும். அது கருத்தரிக்கும்  நேரம்  என்பதற்கான அறிகுறி. அதுவே சினைப்பையில் கட்டி உருவாகி, பொறுக்க முடியாத அளவுக்கு வலி இருந்தால் மருத்துவரைப்  பார்க்க வேண்டும்.  மெனோபாஸ் வயதில் இருப்போருக்கு வரும் வலி அலட்சியப்படுத்தக் கூடாது. கர்ப்பப் பை கட்டியின் விளைவா கவும், அது புற்று நோயாக மாறியதன்  விளைவாகவும் அந்த வலி ஏற்பட்டிருக்கலாம். பாப் ஸ்மியர் சோதனையின் மூலம் அதைக்  கண்டுபிடிக்கலாம்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிற வலிக்கு, உடனே நீங்களாக வலி நிவாரண மாத்திரை வாங்கி உட்கொள்ளக்கூடாது. நிறைய திரவ  உணவுகள்  எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமும், சுகாதாரமும் முக்கியம். ரத்த சோகை இருந்தால் சரிப்படுத்தப்பட வேண்டும்.  நார்ச்சத்துள்ள காய்கறிகள்  மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கர்ப்பப்பை லேசாக இருப்பது போல உணரலாம்...’’ என் கிறார் பொது மருத்துவர் ரிபப்ளிகா.
Disqus Comments