.

Friday, August 22, 2014

கண் எரிச்சல் அடிக்கடி ஏற்படுகிறதா?

கண் எரிச்சல்

கண்களில் அடிக்கடி கண் எரிச்சல்கள் ஏற்படுகிறதா? அப்படியானால் அதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கண் இமைகளுக்கு அடியில் இருக்கும் குழல்களின் வழியாகத் தான் கண்ணீர் சுரக்கும். இந்த குழாய் வறண்டு போவதையே உலர்ந்த கண்கள் என்று கூறுகின்றனர். குளிர் மற்றும் கோடைக்காலத்தின் போது இந்த பிரச்சனை இன்னமும் தீவிரமாக இருக்கும்.


அதற்கு காரணம், இக்காலத்தில் நிலவும் வறண்ட காற்றும், வறண்ட வெப்பமும் தான். கண்களின் சரியான செயல்பாட்டிற்கு கண்ணீர் அவசியமானதாக உள்ளது. அதற்கு காரணம், கண் இமைகள் கண்மணிகளோடு ஒன்றிட கண்ணீர் ஒரு மசகிடுதலாக செயல்படுகிறது. இதனால் கண்மணிகள் ஈரப்பதத்துடன் இருக்க கண்ணீர் உதவுகிறது.

உலர்ந்த கண்கள் உங்கள் பார்வை திறனை குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சில நேரம் கண்மணிகளுக்கு தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். இப்படி குறையுள்ள பார்வை திறனுடன் தினமும் செய்யும் வேலைகளை ஒழுங்காக செய்ய முடியாது தானே.

சமீபத்திய செய்தி அறிக்கைகளின் படி, 50 வயதுக்கு மேற்பட்டோர் தான் இந்த உலர்ந்த கண்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதே போல் மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள இளவயது பெண்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் அறிகுறிகளை கண்டறியுங்கள்: 

* வறண்ட உணர்ச்சி அல்லது கண் அரிப்பு.

* நாள் முழுவதும் கண்களின் எரிச்சல்.

* நாள் முடிவடையும் போது, சிவந்த மற்றும் சோர்ந்த கண்கள்.

* நாள் முடிவடையும் போது, தெளிவான பார்வை இருப்பதில்லை.

ஆகவே கண்களில் பிரச்சனை வந்த பிறகு சிகிச்சையில் ஈடுபடுவதை விட, வரும் முன் காப்பது தானே சிறந்தது. அதனால் கடுமையான கோடைக்காலத்திலிருந்து கண்களை காத்திட உங்களுக்கான சில டிப்ஸ்:

கண்ணாடி அணியவும்

நிலைமை மோசமாக போகும் பட்சத்தில், ஒரு மருத்துவரை சந்தியுங்கள். தூங்க செல்வதற்கு முன் பயன்படுத்த, ஐ-ட்ராப்ஸை அவர் பரிந்துரைப்பார்.

கூலிங் கண்ணாடி

ஹீட்டருடன் சேர்ந்து ஈரப்பதமூட்டியையும் பயன்படுத்துங்கள். அதனால் வீட்டில் இருக்கும் காற்றில் போதுமான ஈரப்பதம் நிலவும். கண்களுக்கு கூடுதல் ஈரப்பதத்தை அளித்திட, கண்களை சுற்றி ஈரப்பதத்தை உண்டாக்கும் மற்றும் கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் விசேஷ கண்ணாடியை அணிந்திடுங்கள்.

ஈரத்துணி

பல மணி நேர வேலைக்கு பின், கண்கள் கனமாக இருந்தால், கண்களின் மேல் வெப்பமுடைய ஈரத்துணியை சில நிமிடங்களுக்கு வைத்திடுங்கள். இதனால் கண்களின் கண உணர்ச்சி குறையும். மேலும் வீட்டு சூழ்நிலையை ஈரப்பதத்துடன் வைத்திடுங்கள். அதிலும் 30-லிருந்து 50 சதவீதத்திற்குள்.

மீன்

உங்கள் உணவில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அல்லது மீன் எண்ணெய் அடங்கிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஜூஸ் குடிக்கவும்

அளவுக்கு அதிகமான பானங்களை பருகி, நீர்ச்சத்துடன் இருங்கள்.

க்ரீன் டீ

எப்போதும் குடிக்கும் தேநீருக்கு பதிலாக க்ரீன் டீ அல்லது செவ்வந்திப்பூ டீயை குடித்திடுங்கள். இது கண்களுக்கு நன்மையை அளித்து சோர்வை தடுக்கும்.

Disqus Comments