.

Saturday, August 9, 2014

அம்னீஷியா எனப்படும் நினைவுத் திறன் பாதிப்பு நோய்


மூளையில் ஏற்படும் ஏதேனும் பாதிப்பு அல்லது நோயின் காரணமாக நினைவுத் திறன் முற்றிலுமாகவோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிலோ இழக்கும் நோயை அம்னீஷியா என்கிறோம்.
வயது முதிர்வு, நினைவுத்திறன் பாதிப்பு நோய், நரம்பியல் பாதிப்பு, தலையில் அடி படுதல், ஹிஸ்டீரியா, குடிக்கு அடிமையாதல், வலிப்பு நோய், பொது மயக்க மருந்து அளித்தல் போன்றவற்றால் அம்னீஷியா ஏற்படலாம்.
இதனை குணப்படுத்த சர்வதேச அளவிலான சில மருந்துகள் உள்ளன. சிலருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த வேண்டியிருக்கும்.
அம்னீஷியாவின் வகை
சமீபத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தும் நினைவில் இருக்கும் (ஷார்ட் டர்ம் மெமரி)
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவைகள் மட்டும் நினைவில் இருக்கும் (லாங் டர்ம் மெமரி)
சிலக் குறிப்பிட்ட அல்லது பாதித்த விஷயம் மட்டுமே நினைவில் இருப்பது (ஆன்டிரோகிரேட்)
ஒரு பாதிப்பு ஏற்பட்டு அதற்கு முன்பு நடந்த விஷயங்கள் அல்லது அதற்குப் பிறகான விஷயங்கள் மட்டும் நினைவில் இருத்தல் (ரிட்ரோகிரேட்)
சிகிச்சை துவங்குவதற்கான பரிசோதனைகள்
பாதிக்கப்பட்ட நபருக்கு சமீபத்தில் தலையில் ஏதேனும் காயம் ஏற்பட்டதா?
மனதை பாதிக்கும் அளவிற்கு ஏதேனும் சம்பவம் நடந்ததா
அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதேனும் சிகிச்சைக்காக பொது மயக்க மருந்து அளிக்கப்பட்டதா
குடிப்பழக்கம் உள்ளவரா? அப்படியானால் எந்த அளவிற்கு?
போதைப் பழக்கம் உள்ளவரா?
இதுபோன்ற விஷயங்களை தெரிந்து கொண்டு எந்த காரணத்தால் ஒருவருக்கு நினைவுத்திறன் பாதிப்பு ஏற்பட்டது என்பதை அறிந்த பிறகுதான் அதற்கு ஏற்ற சிகிச்சை அளிக்கப்படும்.
Disqus Comments