.

Saturday, August 30, 2014

சூடான சாதத்தில் குளிர்ந்த தயிர் கலந்து சாப்பிடலாமா?

சூடான சாதத்தில் குளிர்ந்த தயிர்

சூடான சாதத்தில் குளிர்ச்சியான தயிர் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வரும் என கேள்விப்பட்டேன். உண்மையா? 


சூடான சாதத்தில் தயிர் ஊற்றிச் சாப்பிடுவதால் ஜீரணக் கோளாறுகள் வருமே தவிர மஞ்சள் காமாலை வர வாய்ப்பில்லை. பொதுவாக சூடான சாதத்தில் குளிர்ச்சியான பொருட்களை ஊற்றிக் கலந்தால், சாதத்தின் தன்மை மாறி, ஜீரண மண்டலத்தை பாதிக்கும். இதனால் தொடர்ந்து வயிற்றில் உபாதைகள் உருவாகும். அதனால், சாதத்தை ஆற வைத்தே தயிர் ஊற்றிச் சாப்பிட வேண்டும். ‘மதியம்தானே சாப்பிடப் போகிறோம்... அதற்குள் ஆறிவிடும்’ என்று நினைத்து கலந்து எடுத்துச் செல்வதும் நல்லதல்ல.

அவசரமாக எடுத்துச் செல்ல வேண்டிய நிலை என்றால், சிறிது ஆறிய பாலை சாதத்துடன் கலந்து, நன்கு கிளறி, பிறகு தயிர் கலந்து எடுத்துச் செல்லலாம். மதியம் வரை தயிர் சாதமும் ஃப்ரெஷ் ஆக இருக்கும். புளிக்கவும் செய்யாது. தயிரை மட்டுமல்ல... மோரைக்கூட சூடான சாதத்தில் கலந்து சாப்பிடுவது நல்லதல்ல. 
Disqus Comments