.

Sunday, August 24, 2014

உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!

சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்

ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் செல்லும் போது அங்கு காணப்படும் அனைத்து பானங்களிலும் "சுறுசுறுப்பாக மாறலாம்", "திடமாக மாறலாம்", "இளமையின் நீரூற்று", "உடை எடை குறையும்", "மனநிலை மேம்படும்" போன்ற லேபில்கள் ஒட்டியிருந்தால் ஆனந்த தாண்டவம் ஆடுவீர்கள் தானே? ஆனால் துரதிஷ்டவசமாக வாழ்க்கை அப்படி சுலபமாக எழுதி வைக்கப்படுவதில்லை.

மேலும் உடல் எடையை குறைத்து வலிமையை ஊக்குவிக்க உதவும் என மார்த்தட்டிக் கொள்ளும் அனைத்து பொருட்களிலும் சர்க்கரை நிறைந்திருக்கும். இது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. ஆனால் மூளையின் சக்தியை அதிகரிக்கும் சில பானங்கள் இருக்கிறது. அவைகளை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

இந்த பானங்களை பருகினால் உங்கள் நுண்ணறிவு அதிகரித்ததை போல் உணர்வீர்கள். எந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும் விசேஷ பொருட்கள் இல்லை அவைகள். ஆனால் அவைகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானவையாகும். மேலும் உங்கள் மூளை சிறப்பாக செயல்பட எவ்வகையான பானங்களை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகும். குறைந்த அளவில் மதுபானம் குடிப்பது தவறில்லை. சொல்லப்போனால் அதில் பயன்களும் உண்டு. ஆனால் அதுவே அளவுக்கு மீறி சென்றால் உங்கள் ஈரல் பாதிக்கப்பட்டு அதனால் மூளையும் கெட்டு விடும்.

சர்க்கரை கலந்த பானங்கள் உங்கள் இதயம் மற்றும் இடுப்பு சதைக்கு தீங்கை விளைவிப்பதோடு மட்டுமல்லாது நாளடைவில் அதிமுக்கிய நரம்பியல் பிரச்சனைகளை உண்டாக்கி விடும். இதனால் உங்கள் ஞாபக திறனும் செறிவும் குறைந்து விடும். செயற்கை இனிப்புகள் மற்றும் நிற சாயங்கள் கலக்கப்பட்ட பானங்கள் உங்கள் மூளைக்கு நஞ்சாக விளங்கும்.

\இதனால் இயல்பான அறியும் ஆற்றல் பாதிப்படையும். அப்படிப்பட்ட பானங்களில் கார்சினோஜெனிக் மற்றும் ம்யூடாஜெனிக் அடங்கியிருக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது. அதனால் மூளைக்கு வேலை கொடுக்கும் சில விளையாட்டுகளை தேர்ந்தெடுத்து சரியான பானத்தை பருகி மூளையை தீட்டிடுங்கள்.

மாதுளைப்பழ சாறு

இந்த அயற்பண்புடைய பழத்தில் தனித்துவமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எண்ணிலடங்காமல் உள்ளது. இவைகள் உங்கள் அறியும் ஆற்றல் மற்றும் ஞாபக திறனை மேம்படுத்த உதவும். இந்த பானத்தை தினமும் ஒரு கிளாஸ் பருகினால் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

தேநீர்

கிரீன் அல்லது ப்ளாக் டீயை தேர்ந்தெடுங்கள். தேநீர் பருகுவது மூளையின் நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் சிறந்த வழியாகும். அதற்கு காரணம் கிரீன் டீயில் உள்ள EGCG. இது மூளையின் அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். தண்ணீரில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கப் ப்ளாக் டீ குடித்தால் போதும் உங்கள் எதிர்வினை நேரம் முன்னேற்றம் தெரியும்.

டார்க் சாக்லெட் டார்க்

சாக்லெட்டில் இருக்கும் கொக்கோவில் உள்ள ஃப்ளேவோனால்ஸ் இரத்த குழாய்களின் உட்பூச்சை அமைதியுற செய்து இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இதனால் நாளடைவில் மூளைக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் வெகுவாக குறையும். ஒரு கப் ஹாட் சாக்லெட் பருகினால், வாதம் மற்றும் அறிவாற்றல் குறைபாடுகள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும்.

பெர்ரி ஸ்மூத்தி

ப்ளாக்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி பழங்கள் இருந்தால் போதும், இந்த உலகத்தையே வெல்லும் நம்பிக்கை உங்களுக்குள் ஏற்படும். இந்த இரண்டு பெர்ரி பழங்களும் உங்கள் நரம்பியல் செயல்பாடுகள் மற்றும் மூளை இணைப்புகளை மேம்படுத்த உதவும். மேலும் மனநிலை குறைபாட்டை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிடும். உங்கள் ஞாபக சக்தியுடன் சேர்ந்து, அறிவாற்றல் மற்றும் இயக்கத்துக்குரிய ஆற்றல்களும் கூர்மையாகும்.

லவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் டீ

உங்கள் மூளையின் ஆரோக்கிய ரகசியத்திற்கு இதுவும் முக்கியமான ஒன்றாகும். லவங்கப்பட்டையில் இரண்டு கூட்டுப் பொருட்கள் உள்ளது - ப்ரோஆந்தோசையநிடின் மற்றும் சின்னமல்டீஹைட். இது மூளையில் உள்ள டௌ புரதத்தை குறைக்கும். இதனால் மூளைத்தேய்வு உண்டாவது குறையும். மூளைத்தேய்வை தடுக்கும் ஆற்றல் மஞ்சளிலும் உள்ளது. அதற்கு காரணம் மஞ்சளில் உள்ள கர்குமின் என்னும் கூட்டுப்பொருள். அதிலும் மஞ்சளுடன் ஒலியோகந்தல் கூட்டுப்பொருள் அடங்கியுள்ள ஆலிவ் எண்ணெய்யை சிறிதளவு கலந்து பயன்படுத்தினால் அல்சைமர் ஏற்படாமல் பாதுகாக்கும்.

குறைவான அளவில் மதுபானத்தை பருகுதல்

வோட்கா, பீர் அல்லது வைன் போன்ற மது பானங்கள் மூளையின் மேற்பட்டை செயற்பாட்டை மேம்படுத்த உதவும் என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் படைப்பாற்றல் அதிகரிக்கும். ஆனால் நீங்கள் குடிக்கும் அளவு 0.07-ஐ தாண்டக் கூடாது. அதற்கு காரணம், அளவுக்கு அதிகமாக பருகினால் அது தீங்கை விளைவிக்கும்.

தண்ணீர்

நம் உடம்பில் 70% நீர் தான் என்ற தகவலை நாம் அறிவோம். உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், உங்கள் சருமம் பளபளவென நீர்ச்சத்துடன் விளங்கவும் தண்ணீர் தேவை. மேலும் மூளை திறம்பட செயல்பட அதற்கு ஆக்சிஜன் அளிக்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால் நாம் நீர்ச்சத்தை இழக்கும் போது, நம்மால் சரியாக சிந்திக்க முடிவதில்லை. அதனால் தலைவலியும் ஏற்படுகிறது. தனக்கு ஆக்சிஜன் தேவை என்பதை மூளை இப்படி தான் தெரிவிக்கும்.

சிகப்பு ஒயின்

ஒயினில் உள்ள பாலிஃபீனால்கள் (சாக்லெட்டிலும் கூட) மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதால், அதன் சக்தியை அதிகரிக்க செய்யும் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவிடும். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; அளவாக வைத்துக் கொள்வதே நல்லது.

பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ்

இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிழிந்து ஜூஸ் எடுத்தால் அருமையான நிறத்தில் ஒரு ஜூஸ் கிடைக்கும். அதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வளமையாக உள்ளது. இதை பருகுவதால் ஏதோ நோபல் பரிசு பெற்றதை போல் ஓர் உணர்ச்சியை பெறுவீர்கள். மூளையில் உள்ள நைட்ரிக் ஆக்சைட் உற்பத்தியை அதிகரிக்க உதவும் பீட்ரூட். இதனால் சுற்றோட்டம் மேம்படும். கேரட்டில் பீட்டா-கரோட்டீன் உள்ளது. இது கண்களுக்கு நன்மை அளிப்பதோடு மட்டுமல்லாமல், மூளை தேய்வையும் தடுத்து நிறுத்தும். நரம்பியல் தேய்வு நோய்களான அல்சைமர் போன்றவைகளை ஆப்பிள்கள் தடுக்கும். தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் மருத்துவரே தேவையில்லை என்ற பழமொழியை நீங்கள் அறிவீர்கள் தானே.

இளநீர் மற்றும் தேங்காய் பால்

தேங்காயில் உள்ள அனைத்து கூட்டுப் பொருட்களும் உங்கள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை விளைவிக்கும்; முக்கியமாக மூளைக்கு. மூளை தேய்வை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க இது உதவுகிறது. நீர்ச்சத்தை அளிப்பதோடு அதில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
Disqus Comments