.

Thursday, July 3, 2014

கண்ணாடி போட்டு மூக்கில் தழும்பு வந்துவிட்டதா? இதோ சில டிப்ஸ்...


தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதற்கு காரணம் கண்களுக்கு வேண்டிய சத்துக்கள், உடலில் போதிய அளவில் இல்லாததால், கண்களின் சக்தியானது குறைகிறது. ஆகவே அத்தகையவர்கள் நல்ல ஆரோக்கியமான மற்றும் கண்களுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
கண் பிரச்சனையால், தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான். இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.

இதனால் பலர் கண்ணாடியை அணியாமல் வெளியே வரமாட்டார்கள். இருப்பினும் அதனைப் போக்குவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவை போனபாடில்லை. இதற்கு காரணம், அத்தகைய தழும்புகளைப் போக்குவதற்கு முயற்சிக்கும் போது, தொடர்ச்சியாக கண்ணாடியை அணிவது தான்.

இருந்தாலும் கண்ணாடி போடாமல் இருக்க முடியாது என்பதால், கண்களுக்கு லென்ஸ் பொருத்திக் கொண்டு, பின்னர் அந்த தழும்புகளை போக்க ஆரம்பித்தால், நிச்சயம் அவை எளிதில் போய்விடும். இப்போது கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, மூக்கில் உள்ள கருப்பான தழும்புகளைப் போக்குங்கள்.

தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 2-3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை போக்கலாம்

உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை போக்கும்.

தக்காளி ஒரு இயற்கையான கிளின்சிங் பொருள் என்று சொல்லலாம். ஏனெனில் தக்காளியை கொண்டு முகத்தை சுத்தம் செய்யும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும். அதற்கு தக்காளியின் துண்டுகளைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும்.

வெள்ளரிக்காயில் உள்ள குளிர்ச்சித்தன்மையால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடையும். மேலும் இதனை கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்தால், நிச்சயம் கருமையான தழும்புகள் மறையும்.

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஆகவே பாதாம் எண்ணெயுடன், தேன், மில்க் க்ரீம், ஓட்ஸ் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில், தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதனை தொடர்ச்சியாக செய்தால், கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்கலாம்.

எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது. அதற்கு பஞ்சில் எலுமிச்சை சாற்றினை நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.

வேண்டுமெனில் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக, ஆப்பிள் சீடர் வினிகரையும் பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.

மேற்கூறியவற்றை பின்பற்றுவதற்கு முன், நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

எது செய்கிறோமோ இல்லையோ, தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் தான், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்து வெளியேறி உடல் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும். மேலும் வேறு எந்த ஒரு பிரச்சனையும் உடலில் ஏற்படாமல் இருக்கும்.

Disqus Comments