நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும்.
அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.
கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.