ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரலில் நோய் மற்றும் வாகனங்களில் இருந்து விழுந்து காயங்கள் ஏற்படுவது போன்ற முதன்மையான பிரச்சனைகள் எழுகின்றன என்பது இரகசியம் கிடையாது. மேலும் நீங்கள் ஈரல் நோயும், சாலை விபத்துகளும் தான் ஆல்கஹாலால் ஏற்படும் விளைவுகள் என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். 60 வியாதிகளுக்கும் மேலானவை ஆல்கஹால் சாப்பிடுவதால் வரும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இப்பொழுது நீங்கள் பார்க்கப் போவது அதிகமான ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் 12 விதமான நோய்களை
இரத்த சோகை (அனீமியா)
அதீதமான அளவிற்கு ஆல்கஹால் குடிப்பதால் இரத்தத்திற்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் செல்கள் பெருமளவில் குறைந்து விடும். இந்த சூழலால் தூண்டப்படும் இரத்த சோகை வந்தவர்கள் - களைப்பு, மூச்சுத் திணறல் மற்றும் தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.
புற்றுநோய்
குடிப் பழக்கம் புற்றுநோயை வரவழைக்கும் என்று டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், டொராண்டாவிலேயே உள்ள போதை மற்றும் மன நல மையத்தில் மூத்த அறிவியல் ஆய்வாளராகவும் இருக்கும் ஜர்ஜென் ரெம் என்பவர் தெரிவித்துள்ளார். ஆல்கஹால் புற்றுநோய் வரக் காரணமாக இருக்கும் அசிடல்டிஹைடாக மாறும் போது பிரச்சனையின் கடுமை அதிகரிக்கிறது. வாய், தொண்டை (Pharynx), குரல் வளை (Larynx), உணவுக் குழாய் (Esophagus), கல்லீரல், மர்பகம் மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகள் புற்றுநோய் பரவலாக தாக்குதல் நடத்தும் இடங்களாகும். புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் மிகவும் அதிகமாக இருக்கும்.
இதய நோய்
அதிகமான அளவிற்கு மது அருந்துவதால், இரத்த வட்டுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து இரத்தத்தை உறையச் செய்து மாரடைப்பை வரவழைக்கிறது.
ஈரல் நோய்
கல்லீரல் செல்களை நச்சுத் தன்மையால் பாதிக்கக் கூடியதாக ஆல்கஹால் உள்ளதால், ஆல்கஹால் அதிகமாக குடிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரல் நோயை வரவழைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக கல்லீரலில் நீர் மிகுந்து போய், அதன் செயல்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டு கொடிய நோயாக மாறி விடுகிறது. ஆனால், குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஈரல் நோய் வருவதை முன்கூட்டியே கண்டறியவும் முடியாது. மேலும், பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் அதிகளவில் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
மனச் சோர்வு (Dementia)
10 ஆண்டுகளுக்கு 1.9% என்ற அளவில் வயதாக ஆக, மனிதர்களின் மூளை அளவு சுருங்கிக் கொண்டே செல்லும். அது சாதாரண நிகழ்வாகவே கருதப்படுகிறது. ஆனால், அதிகபட்ச ஆல்கஹால் குடிப்பழக்கம், மூளையின் சில பகுதிகளில் இந்த சுருக்கத்தை வேகப்படுத்தி, நினைவாற்றலை இழக்கச் செய்தல் மற்றும் மனச் சோர்வு போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது.
மன அழுத்தம்
அதீதமான அளவு மது அருந்துவதால் மன அழுத்தம் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான், ஆனால் இதில் மன அழுத்தம் முதலில் வருகிறதா அல்லது மது அருந்தும் பழக்கம் முதலில் வருகிறதா என்று ஒரு விவாதம் நடந்தும் வருகிறது. முன அழுத்தம் உள்ள மனிதர்கள் தங்களுடைய மன வலியை குறைக்கும் பொருட்டாக ஆல்கஹால் குடிக்கிறார்கள் என்ற ஒரு கருத்தும் உள்ளது. ஆனால், 2010-ம் ஆண்டு பல்வேறு நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் - அதிகமான குடிப்பழக்கம் தான் மன அழுத்தத்தை வரவழைக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
வலிப்பு நோய்
குடிப்பழக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு வலிப்பு வரும் என்பது ஒருபுறமிருக்க, இது வரை வலிப்பு நோய் வராதவர்களுக்கு கூட வலிப்பு நோய் வரக் காரணமாகவும் மாறி விடும். மேலும், வலிப்பு நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வரும் மருந்துகளின் செயல்பாட்டையும் கூட மது குறைத்து விடுகிறது.
கீல் வாதம்
மூட்டுகளில் யூரிக் ஆசிட் கற்கள் உருவாகும் வலி மிக்க சூழல் தான் கீல் வாதம். எனினும், பரம்பரை வியாதிகள், ஆல்கஹால் மற்றும் பிற உணவு பழக்கங்களும் ஆகியவையும் கூட இந்த கீல் வாதம் வரலாம். மேலும், ஆல்கஹாலும் கீல் வாதத்தை அதிகப்படுத்தி விடும்.
அதிக இரத்த அழுத்தம்
ஆல்கஹால் பரிவு நரம்பு மண்டலத்தை (Sympathetic Nervous System) பாதித்து, இரத்த குழாய்களின் பிற இடங்களை ஒடுக்கவும் மற்றும் நீட்டிக்கவும் செய்து கட்டுப்படுத்துவதால், அதன் விளைவாக மன அழுத்தம், உடல் வெப்பநிலையில் பாதிப்பு, கடுமையான அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும், அதிகமான மதுப் பழக்கத்தால் இரத்தம் உறைந்து இரத்த அழுத்தம் ஏற்பட்டு, நெடுநாட்களுக்கு தொந்தரவுகள் நீடிக்கும். மேலும், அதிக இரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரக நோய், இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களும் ஏற்படும்.
தொற்று நோய்கள்
மது அதிகம் அருந்துவதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைக்கப்பட்டு விடுவதால், காசநோய், நிமோனியா, ஹெச்.ஐ.வி மற்றும் பிற பாலியல் தொடர்பான (மலட்டுத் தன்மையை வரவழைக்கும்) நோய்களின் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. எனவே அதிகமான குடிப்பழக்கம் உள்ளவர்கள் பாலியல் தொடர்பான நோய்களால் தாக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சாதாரணமானவர்களை விட, குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு பாலியல் நோய்கள் வர மூன்று மடங்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
நரம்பு மண்டல பாதிப்பு
உடல் முனைகளில் ஊசி முனை கொண்டு குத்துவது போன்ற வலிகளையும், தசைகள் பலவீனமடைதல், கட்டுப்பாடு இழந்து போதல், மலச்சிக்கல், விறைப்புத்தன்மை குறைதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஆல்கஹால் அதிகம் குடிப்பதால் ஏற்படும் ஆல்கஹாலிக் நியூரோபதி என்ற நரம்பு மண்டலம் சம்மந்தப்பட்ட நோயினால் வருகின்றன. நரம்பு செல்களுக்கு நச்சுத்தன்மையை ஆல்கஹால் ஏற்படுத்துவதாலும் அல்லது அதிகமாக குடிப்பதால் ஏற்படும் ஊட்டச்த்து குறைபாடுகளாலும் ஆல்கஹாலிக் நியூரோபதி பிரச்சனை உருவாகிறது.
கணைய அழற்சி
வயிற்றில் எரிச்சல் (Gastritis) ஏற்படுவதால் கணையத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. நீடித்த கணைய அழற்சியினால் உணவு செரிமாணம் ஆவதும், அடி வயிறு வலிப்பதும் மற்றும் தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படுவதும் பிரச்சனைகளாக உள்ளன. நீடித்த நாட்கள் கணைய அழற்சி தொடர்பாக இருந்த சில பிரச்சனைகளில் பித்தக்கற்கள் உருவாகும். ஆனால் இதில் 60% பிரச்சனைகள் ஆல்கஹால் குடிப்பதால் மட்டுமே ஏற்படுகின்றன.