கடைகளில் ஹாஃப் குக் செய்யப்பட்ட புரோட்டா, சப்பாத்திகளை வாங்கி பயன்படுத்தலாமா? அவசரத் தேவைக்கு எப்போதாவது ஒருமுறை பயன்படுத்தலாம்.
தொடர்ந்து சாப்பிடுவது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற் குச் சமம். இந்த வகையான சப்பாத்தி, புரோட்டா பல நாட்களுக்கு முன்பே செய்யப்பட்டவையாக இருக்கும்.
எப்போதும் ஃப்ரெஷ் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் ஹைட்ரஜனேட்டட் கொழுப்புகளை சேர்ப்பார்கள். இவற்றைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ரத்த கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும்.
அதனால் பருமன் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படும். ஹாஃப் குக் புரோட்டாவில் மைதாவுடன் இந்தக் கொழுப்பும் சேர்வதால் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகி ஆபத்து ஏற்படலாம்.
இதய நோயாளிகள், நீரிழிவு உள்ளவர்கள் இந்தத் தயாரிப்புகளை முற்றிலுமாகத் தவிர்த்துவிட வேண்டும்.