.

Monday, June 9, 2014

வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்


காலை 6.00: 

காலை எழுந்தவுடன் தேன் + தண்ணீர் கலந்து போதுமான அளவு அதிகம் குடிக்கவும். அல்லது இதே போல் 1/4 ஸ்பூன் சீரகப் பொடி கலந்து கொள்ளவும்.


காலை 7.00:

வேப்பிலை, அருகம்புல், வெந்தயக் கீரை, மணத் தக்காளி, முருங்கையிலை, குப்பைமேனி, புதினா, கொத்தமல்லி போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு டம்ளர் ஆகுமாறு அடுப்பில் வைத்து வற்றக்காய்ச்சி வடிகட்டி உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக உட்கொள்ளவும்.

காலை 8 முதல் 8.30 வரை:

தினம் காலை உணவை பச்சையாக சாப்பிடும் பழங்கள், காய்கள், வெஜிடபிள் சாலட், புரூட் சாலட், புரூட் ஜுஸ், இளநீர் போன்றவைகளை தேவையான அளவு உட்கொள்ளலாம். முடியுமான வரை காய்கள், பழங்களை தோலுடன் உட்கொள்ளவும்.

காலை 11 முதல் 11.30 வரை:

தாளித்து நீர் மோர், கேரட் சூப், தண்ணீர் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று உட்கொள்ளலாம்.

மாலை 1 முதல் 2 வரை: பகல் உணவை சமைத்த உணவாக உட்கொள்ளலாம். உண்ணும் உணவின் அளவில் 50ரூ அளவு சமைத்த உணவாகவும் 50ரூ அளவு வேகவைத்த காய்கள், கீரைகள் போன்றவனவாக உட்கொள்ளவும்.

மாலை 4 முதல் 5 வரை:

கேரட் ஜுஸ், சத்துமாவு கஞ்சி, வெந்தயக்கீரை சூப், மணத்தக்காளி சூப் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ளவும்.

மாலை 7 முதல் 8.30 வரை:

வாரத்தில் நான்கு நாட்கள் மேற்குறிப்பிட்டவாறு சமைத்த உணவும், மூன்று நாட்கள் பழ உணவாகவும் உட்கொள்ளவும்.

மற்ற தகவல்கள்

* தினம் நான்கு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கவும்.

* புகைத்தல், மது வகைகள், மாமிச உணவுகள், பால், பால் கலந்த உணவுகள், சர்க்கரை கலந்த இனிப்புகள் முதலியன தவிர்க்கவும்.

* அரை ஸ்பூன் வெந்தயதூள் தண்ணீரில் கலந்து தினம் காலை உணவுக்கு முன் குடிக்கவும்.

* காலை வயிற்றின் மேல் ஈரத்துணி பற்று 10 – 20 நிமிடம் போடவும். இதனை உணவுக்கு முன் செய்ய வேண்டும்.

* நான்கு நாட்களுக்கு ஒரு முறை பகல் ஒரு வேளை திட உணவை தவிர்க்கவும்.

* ஒவ்வொரு வேளை உணவையும் 3/4 (அ) 1/2 வயிறு ஆகாரமாக உட்கொள்ளவும்.

* 50 கிராம் முட்டை கோஸ் ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைத்து அந்த நீரை வடிகட்டி தினம் ஏதேனும் ஒரு வேளை உணவுக்கு முன் குடிக்கவும்.

* கேரட், பலாப்பழம், தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், வாழைப்பழம், கொய்யா, வெண்பூசணி, சுரக்காய், பீட்ரூட், புடலங்காய், பூண்டு போன்றவைகளை அடிக்கடி விரும்பி சாப்பிடவும்.

* பழைய சாதநீர் தினம் முடிந்த அளவு சிறிது உப்பு கலந்து காலை எழுந்தவுடன் குடிக்கலாம்.
Disqus Comments