.

Tuesday, June 10, 2014

புதினாவில் உள்ள பலன்கள் உங்களுக்கு தெரியுமா?



நறுமணமும், நற்சுவையும், மூலிகைத் தன்மையும் புதினாவின் புகழுக்கு காரணம். இதில் அடங்கி உள்ள சத்துக்களை பார்க்கலாம்.

* புதினா ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட மூலிகைத் தாவரம். தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. நிழல் மிகுந்த பகுதிகளில் இது நன்கு வளரும்.



* புதினாவில் தாவரங்களில் காணப்படும் சிறப்பு ரசாயன மூலக்கூறுகள் பல உள்ளன. இவை சிறந்த நோய் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியம் வழங்கும் பொருட்களாகும்.

* புதினாவின் நோய் எதிர்ப்பு தன்மையை அளவிட்ட ஆய்வாளர்கள், 100 கிராம் புதினா 13 ஆயிரத்து 978 மைக்ரோ மூலக்கூறு டி.இ. அளவு நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது என கூறுகிறார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும் அளவைக் கொண்டு, நோய் எதிர்ப்பு அளவு கணக்கிடப்படுகிறது.

* கெட்ட கொழுப்புகள் எதுவும் புதினாவில் இல்லை. உடலுக்கு அவசியமான எண்ணெய்ப் பொருட்கள், வைட்டமின்கள், நார்ப் பொருட்கள் ஏராளம் உள்ளன.

* மென்த்தால், மென்த்தோன், மென்த்தால் அசிடேட் போன்ற எண்ணெய்ப் பொருட்கள் இதில் உள்ளன. இவை எளிதில் ஆவியாகக் கூடியது. தோல், தொண்டை, வாய்ப் பகுதிக்கு நன்மை அளிக்கக் கூடியது. உடலில் காணப்படும் துளைகள் சரியாகச் செயல்பட இவை துணை நிற்கும். அவற்றில் அடைப்புகள் ஏற்படாமல் காக்கும்.

* மென்த்தால் சிறந்த வலி நிவாரணியாக பயன்படுகிறது. மயக்கமூட்டும் பொருளாகவும், எரிச்சலை குறைக்கும் பொருளாகவும் இதனை பயன்படுத்துகிறார்கள்.

*  ஐ.பீ.எஸ். மற்றும் கோலிக் பெயின் டிஸ்ஸாடர் போன்ற வியாதி பாதித்தவர்களுக்கு புதினா திரவம் உடலில் பூசப்படுகிறது. இது நோயின் திடீர் தீவிரத்தை கட்டுப்படுத்தும்.

* பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் புதினாவில் உள்ளன. 100 கிராம் புதினாவில் 569 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. இது உடல் வளவளப்பு தன்மையுடன் இருக்க அவசியமாகும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் பொட்டாசியம் பங்கு வகிக்கிறது.

* மாங்கனீசு மற்றும் தாமிரம் போன்றவை நோய் எதிர்ப்பு நொதிகள் சிறப்பாக செயல்பட துணைக் காரணியாக விளங்கும்.

* சிறந்த நோய் எதிர்ப்பு வைட்டமின் ஆன வைட்டமின் ஏ, புதினாவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் இ போன்ற வைட்டமின்களும் உள்ளன. பி குழும வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், பைரிடாக்சின் மற்றும் வைட்டமின் கே ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

Disqus Comments