.

Saturday, June 7, 2014

நீண்ட கூந்தல் வேண்டுமா? இதை முயற்சி பண்ணுங்க

ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !! கூந்தலின் வேர்கள் வலுவாக இருந்தால் கூந்தல் உதிராது. கூந்தலுக்கு அவ்வப்போது மசாஜ் செய்வதன் மூலம் வேர்களை வலுவடையச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் இதோ.

எண்ணெய் மசாஜ் 

ஒவ்வொரு கூந்தலுக்கும் ஒரு ஆயுள் உண்டு. குறிப்பிட்ட ஆயுட்காலம் முடிந்தாலும் அந்தக் கூந்தல் உதிரும். கூந்தல் உதிர்வதைத் தடுக்க அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்தக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால்களின் பலவீனத்தை இது போக்கும். கூந்தல் உதிர்வது கட்டுப்படுத்தப்படும். எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

நீராவி ஒத்தடம்

தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்துஇ அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும். மாதம் ஒருமுறை இவ்வாறு செய்யலாம்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கித் தலையில் தடவி மசாஜ் செய்து, வெந்நீரில் முக்கிப் பிழிந்த டவலால் தலைக்கு நீராவி ஒத்தடம் தர வேண்டும். பிறகு தரமான சீயக்காயோ, ஷாம்புவோ போட்டு கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தாலே கூந்தல் உதிர்வு நின்று ஆரோக்கியமாக வளரும்.

பதிவு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க நண்பர்களே

Disqus Comments