உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம். ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிகவும் இன்றியமையாதது.
எனவே அத்தகைய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை 10 நாட்கள் உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இங்கு அப்படி 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய வாட்டர் டயட் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வல்லுனர்களும் மற்ற வழிகளை விட, வாட்டர் டயட்டை பின்பற்றினால் மிகவும் ஈஸியாகவும், சீக்கிரமாகவும் எடையைக் குறைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ் நடிகரான விக்ரம் கூட, தனது எடையை குறைப்பதற்கு வாட்டர் டயட்டைப் பின்பற்றினார்.
மேலும் உடல்நல வல்லுனர்களும் வாட்டர் டயட்டை பின்பற்றினால், எடை குறைவதுடன், இதர நன்மைகளும் கிடைக்கும் என்று நம்புகின்றனர். அதில் சீரான இரத்த அழுத்தம், தெளிவான பார்வை, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதிலும் இது சற்று கடுமையான டயட். என்ன செய்வது, எடையை குறைக்க வேண்டுமானால் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் தானே! சரி, இப்போது 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய அந்த வாட்டர் டயட் பற்றிப் பார்ப்போமா!!!
டே 1: தண்ணீர் வாட்டர் டயட்டின் முதல் நாள் வெறும் தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அதிலும் நாள் முழுவதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
டே 2: க்ரீன் டீ இரண்டாம் நாள் க்ரீன் டீயை பருக வேண்டும். அத்துடன் இதனால் உடலில் உள்ள நச்சுக்களானது வெளியேற ஆரம்பிக்கும்.
டே 3: ஐஸ் தண்ணீர் அதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஐஸ் தண்ணீரைப் பருக வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரிக்கும்.
டே 4: வெல்லம் கலந்த நீர் நான்காம் நாள் 5 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். அதுவும் அந்த நீரில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து கலந்து பருக வேண்டும். இதனால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.
டே 5: சூப் ஐந்தாம் நாளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை உடலில் சேர்க்க வேண்டும். அதற்கு ஐந்தாம் நாளன்று நான்கு முறை ஒரு கப் உங்களுக்கு பிடித்த சூப்பை குடிக்க வேண்டும். அது அசைவ சூப்பாக கூட இருக்கலாம்.
டே 6: ஜூஸ் ஆறாம் நாள் வெறும் பழங்களால் செய்யப்பட்ட பிரஷ் ஜூஸ்களை குடித்து வர வேண்டும்.
டே 7: இனிப்பு தண்ணீர் 10 நாள் வாட்டர் டயட்டின் ஏழாம் நாளன்று குடிக்கும் நீரில் 1 சிட்டிகை சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். இதனால் எடை குறைவதுடன், உடலின் இரத்த அழுத்தமானது சீராக இருக்கும்.
டே 8: சுடுநீர் எட்டாம் நாளன்று சுடுநீரை குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைய ஆரம்பித்து, செல்லுலைட்டின் அளவையும் குறைக்கும்.
டே 9: மூலிகை நீர் பொதுவாக மூலிகை நீரைப் பருகினால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறிவிடும். ஏனெனில் மூலிகைகளுக்கு அத்தகைய சக்தியானது உள்ளது. எனவே ஒன்பதாம் நாளன்று மூலிகையால் செய்யப்பட்ட டீயை பருகி வாருங்கள்.
டே 10: எலுமிச்சை ஜூஸ் எடையை குறைப்பதில் எலுமிச்சை ஜூஸ் மிகவும் சிறந்த பானம். எனவே அத்தகைய எலுமிச்சை ஜூஸை பத்தாம் நாளன்று தேன் மற்றும் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து குடித்து வர வேண்டும். குறிப்பு மேற்கூறியவாறு பின்பற்ற முடியாவிட்டால், ஒவ்வொரு நாளும் அவ்வப்போது பழங்களை எடுத்து வாருங்கள்.