.

Thursday, May 8, 2014

கழுத்து வலி காரணமும் தீர்வும்




இதயத்திலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து உடம்போட மத்த பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்கிற நரம்புகள், கழுத்துப்  பகுதிலதான் இருக்கு. அடிப்பட்டாலோ, அந்த நரம்புகள்ல பாதிப்பு வந்தாலோக்கூட கழுத்து வலி வரலாம். சாதாரண வலி, சுளுக்குன்னு அதை அலட்சியப்படுத்தறது ஆபத்தானது.


கழுத்து எலும்பு தேய்மானம் மட்டுமே கழுத்து வலிக்காண காரணமில்லை. வயசானவங்களுக்கு வரும் வலிக்குத்தான் அது காரணமாகலாம். மத்தபடி கழுத்து எலும்பிலுள்ள சிறு சந்திப்புகள்ல வரக்கூடிய பாதிப்புகளால ஏற்படும் வலிதான் பிரதான காரணம். இது சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன்ல தெரியாது. பிரத்யோக கண்டுபிபடிப்பு முறைகள் மற்றும் நோய் அறிகுறிகளை வச்சுத்தான் இதைக் கண்டுபிடிக்க முடியும்.

அடுத்து கழுத்து தண்டுவடத்துல உண்டாகிற பாதிப்பும், கழுத்து எலும்பு விலகறதும் கூட கழுத்து வலிக்காண காரணம் ஆகலாம்.  கழுத்து வலி சிலருக்கு பின் தலைவலியாகவோ, தோள்பட்டை வலியாகவோ, கை வலியாகவோ மாறலாம். மத்த வலிகளுக்கெல்லாம் சிகிச்சை கொடுத்திட்டிருப்பாங்க. கழுத்துக்கான சிகிச்சையை கொடுத்தாலே மத்த வலிகள் குறையறதை பார்க்கலாம் என்கிற டாக்டர்  குமார் கழுத்து வலியால் பாதிக்கப்பட்டோர் செய்யவேண்டிய செய்யக்கூடாத விஷயங்களை பட்டியலிடுகிறார்.

செய்யக்கூடாதவை

கழுத்தை தவறாக உபயோகிக்கிறதை நிறுத்தணும். சுளுக்கு எடுக்கறேங்கிற பேர்ல அடிக்கடி மஜாஜ் செய்யறது தற்காலிக நிவாரணம் தந்தாலும், நரம்பு பாதிப்பு, சதைத்தெறிப்பு, போன்றவற்றை உண்டு பண்ணி பெரிய பிரச்சனைகளையும் அதன் தொடர்சியான வலியையும் கொடுக்கும். படுத்துகிட்டே டிவி பார்க்கிறது, படிக்கிறது, பயணம் செய்யற போது உட்கார்ந்துகிட்டே தூங்கறதெல்லாம் வலியை அதிகரிக்கும்.  டாக்டரோட அட்வைஸ் இல்லாம வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கக்கூடாது.

செய்யக்கூடியவை

கழுத்து தசைகளை பலப்படுத்தற பயிற்சிகளை டாக்டரோட ஆலோசனைப்படி செய்யலாம். தூங்கும் போது 10செமீ உயரம் உள்ள தலையணை உபயோகிக்கனும். தலையனை இல்லாமல் படுக்கறது சில சமயங்களில் கழுத்தோட நரம்புகள்ல அழுத்தம் ஏற்படுத்தலாம். கம்ப்யூட்டர், மானிட்டர், கண்களை விட 20டிகிரி தாழ்வாகவும் கண்கள்லேர்ந்து 20இன்ச் இடைவெளி விட்டும் இருக்கனும்.

பயனுள்ள பதிவுகளை முகநூலில் பகிரவும் விருப்பம் தெரிவிக்கவும் மறந்துவிடவேண்டாம் உறவுகளே
 
Disqus Comments