மாதவிலக்கு பிரச்னை தீர...
* மாதவிலக்கு பிரச்னையால் அதிக உதிரபோக்கு உள்ளவர்கள், மாம்பருப்பை, பாலுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் குணமாகும்.
* மாதுளம் பழத்தோலை அரைத்து, புளித்த மோரில் கலந்து சாப்பிட்டால் மாத விலக்கு பிரச்னை தீரும்.
* கொய்யா இலை, மாதுளம் இலை, மாந்தளிர் இலை மூன்றையும், சம அளவு எடுத்து, ஒன்றாக சாப்பிட்டால் மாத விலக்கு பிரச்னை தீரும்.
* மாதவிலக்கு சிக்கல் தீர, காட்டு கருணைக் கிழங்கை பசும்பால் சேர்த்து அரைத்து, ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், மாதவிலக்கு உண்டாகும்.
* முருங்கை கீரையுடன், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து, சூப் செய்து ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் மாதவிலக்கு உண்டாகும்.