* ஆளி விதையை அரைத்து, அதனுடன் ஆளி விதை எண்ணெய் மற்றும் சுத்தமான தேன் சிறிதளவு சேர்த்து கலக்கவும். இந்த பத்தை மருவின் மீது தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒட்டவும்.
இந்த பத்தை தினமும் புதிதாக தயாரித்து உபயோகிப்பது நல்லது. இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
பூண்டு பல் ஒன்றை நசுக்கி, பாதிக்கப்பட்ட பாகத்தின் மேல் தடவுவது மற்றுமொரு மிகச்சிறந்த வைத்தியமாகும். அவ்வாறு தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒன்றை ஒட்டி விடுங்கள்.
* அன்னாசிப்பழத்தை அவ்வப்போது வெட்டி, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களை குணமாக்குவதற்கான சக்தி வாய்ந்த மருத்துவ முறையாகும்.
* அத்திப்பழத் தண்டுகளில் இருந்து சாறு எடுத்து, அதனை ஒரு நாளில் பலமுறை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களைப் போக்குவதற்கான சிறந்த மருத்துவ முறைகளுள் ஒன்றாகும்.
* கற்பூர எண்ணெய், மருக்களை போக்குவதில் தன் ஆற்றலை பலமுறை நிரூபித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியின் மீது கற்பூர எண்ணெயை ஒரு நாளில் பலமுறை தடவி வர வேண்டும்.