.

Thursday, May 1, 2014

உடல் எடை குறைக்க உதவும் உணவுகள்


உடல் எடை குறைக்க விரும்புவோர் என்ன அதிகம் சாப்பிடலாம்?

வெந்தயக் கீரை, காய்கறிகள் சேர்த்த சப்பாத்தி, தோசை, பொங்கல், அடை, பயத்தம்பருப்பு போன்றவை சேர்த்த உணவுகள் சாப்பிடலாம்.

இளைக்கணும்னா தோசை சாப்பிடுங்க!

நமது சமையல் முறைப்படி இட்லிக்கு பதில் எண்ணெய்விடாத தோசை சாபிட்டால் விரைவில் செரிக்காது, உடல் எடை குறைக்க விரும்புவோர் அளவாக தோசை சாப்பிடலாம்.

பொங்கல், அடை போன்ற உணவுகளில் நிறைய புரதம், நார் சத்துக்கள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகாது. இவை உடனே சர்க்கரையாக மாறும் உணவுத்தன்மை இல்லாதது. எனவே பொங்கல், அடையையும் அளவோடு சாப்பிடலாம்.

கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைப்பதற்கு நல்ல மாற்றாக மூன்று வேளை கிரீன் டீ அருந்தி உடல் எடையையும் குறைக்கலாம். இதன்மூலம் இதயநோய், பக்கவாதத்தையும் தடுக்கலாம். பால் சேர்க்காமல்தான் கிரீன் டீ அருந்த வேண்டும்.

கொசுறு: கறுப்பு தேநீர் அருந்தினாலும் இந்த நன்மைகள் உண்டு.
***

இரண்டாவது எளிய வழி

இரவில் பால் அருந்தி விட்டுப் படுக்கிறவர்களும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூளைச் சேர்த்து அருந்தவும்.
*
மூன்றாவது வழி:

நமக்கு மிகவும் தெரிந்த வழி. இரண்டு வேளை 100 முதல் 200 மில்லி லிட்டர் அளவுள்ள தயிரை சாப்பிட்டு வருவதுதான். தயிரில் இனிப்பு, உப்புச் சேர்க்க வேண்டாம். தயிரில் உள்ள கால்சியம் உப்பு கொழுப்பு எங்கே சேமிப்பாக இருந்தாலும் கரைத்து விடுகிறது.

ஏற்கெனவே உள்ள கொழுப்பை கரைப்பதுடன் நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் கொழுப்பையும் தயிர் கரைத்து விடுகிறது. குறைந்த அளவு சாதத்தில் தயிரை நன்கு சேர்த்தும் சாப்பிடலாம். தயிர் மூலம் தொடர்ந்து கால்சியம் கிடைப்பதே மிக முக்கியம்.

மேற்கண்ட மூன்று அரிய உணவுகளும் எடையைக் குறைத்து ஆரோக்கியத்தைப் பாதுகாப்புடன் கிரீன் டீ இதய நோயையும், மஞ்சள் தூள் புற்றுநோயையும், பாலும் தயிரும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோயையும் முன் கூட்டியே தடுக்கின்றன.

Disqus Comments