.

Tuesday, April 8, 2014

ஒற்றைத் தலைவலியா?



ஒற்றைத் தலைவலியா? மன அழுத்தம் வரும்!மருத்துவர்கள் எச்சரிக்கை!!ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அதற்கு சரியான சிகிக்சை மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


வீரியமுள்ள மைக்ரேன் வந்தால், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, வயதான போது மறதி நோய் வர வாய்ப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.தலைவலிகளில் பல விதமான தலைவலிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவை; அதற்கான காரணமும் தெரியாது. ஆனால், ஒற்றைத்தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் வந்து விட்டால் போதும், மாத்திரையும் கையுமாக தான் அலைய வேண்டும்.


தலையினுள் சுத்தியால் பிளப்பது போன்ற உணர்வு. ஒருபக்கமாக வலி, மூளையில் ஏற்படும் அதிர்வு போன்றவையே மைக்ரேன் தலைவலி எனப்படுகின்றன.வேலையை முடக்கும்இது ஒரு பக்க தலையில் மட்டும் வலிக்கும். சில மணி நேரம் , சில நாள் வரை கூட தொடரும். பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளில், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பக்க தலையில் வலிக்கும். சிலருக்கு இரு பக்கமும் வலி ஏற்படும். எந்த வேலையையும் செய்ய முடியாமல் முடக்கிப்போடும்.

கண்களை மூடிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கத்தோன்றும். வாந்தி வருவது போல தோன்றும்.உலகம் முழுவதும் பல நாடுகளிலும் “மைக்ரேன்’ பாதிப்பு உள்ளது. 80 சதவீத மைக்ரேன் பாதிப்பு சாதாரணமானவை தான். 20 சதவீத மைக்ரேன் பாதிப்பு தான் , சில நோய்களால் ஏற்படுகின்றன.

இந்த வீரிய முள்ள மைக்ரேன் வந்தால், மூளை நரம்புகள் பாதிக்கப் பட்டு, வயதான போது மறதி நோய் வர வாய்ப்பு அதிகம்.மன அழுத்தம் இருந்தால், இந்த தலைவலி வரும். அடிக்கடி வந்தால் மைக்ரேன் தான். அதுபோல, சிகரெட் பிடிப்போர், அடிக்கடி கருத்தடை மாத்திரை விழுங்குவோர், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்காதவர்களுக்கு கூட இந்த பாதிப்பு வரும்.நான்கு கட்ட தலைவலிமலச்சிக்கல், மன அழுத்தம் போன்ற காரணத்தால் அடிக்கடி தலைவலி வந்தால் சந்தேகப்பட வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் மைக்ரேன் ஆரம்பம். இதன் பெயர் “ப்ரோட்ரோம்’ இரண்டாவது கட்டம் “ஆரா’ என்பது. இந்த கட்டத்தில் தான் விளக்கு வெளிச்சத்தை பார்த்தாலே கண்களை மூடிக்கொள்ள வைக்கும். சில வகை வாசனைகள் கூட தலைவலியை ஏற்படுத்தும். பேசும் போது வார்த்தைகள் தடுமாறும்; நினைவாற்றலும் பாதிக்கும்.இதில் தலைவலியுடன் மூக்கடைப்பு, தண்ணீர் வற்றிப்போன நிலை, மயக்கம் வரும். மைக்ரேனில் மோசமான தலைவலி நான்கு கட்டமாக வரும். இது போஸ்ட்ரோம் எனப்படுகிறது. நாட்கணக்கில் கூட இது தொடரும். கடைசியில் மன அழுத்தம் ஏற்படும். எந்த வேலையிலும் நாட்டம் வராது.சரியான தூக்கம்தனக்கு வந்திருப்பது மைக்ரேன் தானா என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரியாது. சில அறிகுறிகள் , தொடர்ந்து வருவது போன்றவற்றால் தான் அதை கண்டுபிடிக்க முடியும்.

சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, அடிக்கடி விரதம் இருப்பது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்றவற்றாலும் மைக்ரேன் வரும். தனக்கு எதனால் வருகிறது என்பதை தெரிந்து அதை தவிர்த்துக்கொண்டாலே போதும்; ஒற்றைத்தலைவலி வராமல் நின்று விடும்.அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள்நாள் பட்ட டின்னில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மாமிசம், ரெட் ஒயின் உட்பட சில வகை மதுக்கள், பீன்ஸ், காபி, சாக்லெட், மோர், கிரீம், மிட்டாய்கள், உணவில் மணம் அதிகரிக்க சேர்க்கப்படும் சில வகை பொருட்கள், வேர்க்கடலை உட்பட சில வகை கடலைகள், பப்பாளி, ஊறுகாய், சாஸ், இனிப்பு வகைகள் போன்றவையும் மைக்ரேன் தலைவலியை தூண்டும்.

இந்த உணவுகளில் ஏதாவது ஒன்று அலர்ஜியை ஏற்படுத்தினாலும், சம்பந்தப் பட்டவருக்கு மைக்ரேன் வரும் எனவே இவற்றை தவிர்க்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.பரம்பரை நோய்பரம்பரையாக வரும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று. அப்பா, அம்மாவில் யாருக்காவது இருந்தாலோ, தாத்தா, பாட்டிக்கு இருந்தாலோ வாரிசுகளில் யாருக்காவது வரும். குழந்தைகளுக்கு வருமா என்று கேட்கலாம்; நிச்சயமாக வரும். ஆனால், சில நிமிடங்களில் போய்விடும். அதனால் தான், சில குழந்தைகளுக்கு வாந்தி வருகிறது; லைட்டை பார்த்தாலே கண் கூசுகிறது. இளைய வயதில் மைக்ரேன் வர வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சிகிச்சை பெற வேண்டும்.

பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளுக்கு சிகிச்சை தேவையில்லை. உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வந்தாலே போதும். தொடர்ந்து தலைவலி வந்தால், அதை தடுக்க யோகா பயிற்சி செய்வது நல்லது.

எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை விழுங்குவதை தவிர்க்க வேண்டும்.தலைவலிக்கும் நேரத்தில் நன்கு பழுத்த கறுப்பு திராட்சைகளை மிக்சியில் போட்டு அடித்து சாறு பிழிந்து அதை பருகவேண்டும்.

இது ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் தரும்.வைட்டமின் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவதன் மூலம் மைக்ரேன் வராமல் தடுக்க முடியும்.

மீன்கள், பச்சைக் காய்கறிகள், கோதுமை, உலர் பழங்கள், கொட்டைகள் போன்றவை உட்கொள்ளலாம்.

தலைவலிக்கும் போது வெள்ளரிக்காய் ஜூஸ் பருகலாம். காரட் ஜூஸ் ஒற்றைத் தலைவலிக்கு அருமருந்து.ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அதற்கு சரியான சிகிக்சை மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வீரியமுள்ள மைக்ரேன் வந்தால், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, வயதான போது மறதி நோய் வர வாய்ப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தலைவலிகளில் பல விதமான தலைவலிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலானவை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவை; அதற்கான காரணமும் தெரியாது. ஆனால், ஒற்றைத்தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் வந்து விட்டால் போதும், மாத்திரையும் கையுமாக தான் அலைய வேண்டும். தலையினுள் சுத்தியால் பிளப்பது போன்ற உணர்வு. ஒருபக்கமாக வலி, மூளையில் ஏற்படும் அதிர்வு போன்றவையே மைக்ரேன் தலைவலி எனப்படுகின்றன.

வேலையை முடக்கும்

இது ஒரு பக்க தலையில் மட்டும் வலிக்கும். சில மணி நேரம் , சில நாள் வரை கூட தொடரும். பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளில், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பக்க தலையில் வலிக்கும். சிலருக்கு இரு பக்கமும் வலி ஏற்படும். எந்த வேலையையும் செய்ய முடியாமல் முடக்கிப்போடும். கண்களை மூடிக்கொண்டு இருந்தால் போதும் என்று நினைக்கத்தோன்றும். வாந்தி வருவது போல தோன்றும்.

உலகம் முழுவதும் பல நாடுகளிலும் “மைக்ரேன்’ பாதிப்பு உள்ளது. 80 சதவீத மைக்ரேன் பாதிப்பு சாதாரணமானவை தான். 20 சதவீத மைக்ரேன் பாதிப்பு தான் , சில நோய்களால் ஏற்படுகின்றன. இந்த வீரிய முள்ள மைக்ரேன் வந்தால், மூளை நரம்புகள் பாதிக்கப் பட்டு, வயதான போது மறதி நோய் வர வாய்ப்பு அதிகம்.

மன அழுத்தம் இருந்தால், இந்த தலைவலி வரும். அடிக்கடி வந்தால் மைக்ரேன் தான். அதுபோல, சிகரெட் பிடிப்போர், அடிக்கடி கருத்தடை மாத்திரை விழுங்குவோர், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்காதவர்களுக்கு கூட இந்த பாதிப்பு வரும்.

நான்கு கட்ட தலைவலி

மலச்சிக்கல், மன அழுத்தம் போன்ற காரணத்தால் அடிக்கடி தலைவலி வந்தால் சந்தேகப்பட வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் மைக்ரேன் ஆரம்பம். இதன் பெயர் “ப்ரோட்ரோம்’ இரண்டாவது கட்டம் “ஆரா’ என்பது. இந்த கட்டத்தில் தான் விளக்கு வெளிச்சத்தை பார்த்தாலே கண்களை மூடிக்கொள்ள வைக்கும். சில வகை வாசனைகள் கூட தலைவலியை ஏற்படுத்தும். பேசும் போது வார்த்தைகள் தடுமாறும்; நினைவாற்றலும் பாதிக்கும்.

இதில் தலைவலியுடன் மூக்கடைப்பு, தண்ணீர் வற்றிப்போன நிலை, மயக்கம் வரும். மைக்ரேனில் மோசமான தலைவலி நான்கு கட்டமாக வரும். இது போஸ்ட்ரோம் எனப்படுகிறது. நாட்கணக்கில் கூட இது தொடரும். கடைசியில் மன அழுத்தம் ஏற்படும். எந்த வேலையிலும் நாட்டம் வராது.

சரியான தூக்கம்

தனக்கு வந்திருப்பது மைக்ரேன் தானா என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரியாது. சில அறிகுறிகள் , தொடர்ந்து வருவது போன்றவற்றால் தான் அதை கண்டுபிடிக்க முடியும். சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, அடிக்கடி விரதம் இருப்பது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்றவற்றாலும் மைக்ரேன் வரும். தனக்கு எதனால் வருகிறது என்பதை தெரிந்து அதை தவிர்த்துக்கொண்டாலே போதும்; ஒற்றைத்தலைவலி வராமல் நின்று விடும்.

அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள்

நாள் பட்ட டின்னில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மாமிசம், ரெட் ஒயின் உட்பட சில வகை மதுக்கள், பீன்ஸ், காபி, சாக்லெட், மோர், கிரீம், மிட்டாய்கள், உணவில் மணம் அதிகரிக்க சேர்க்கப்படும் சில வகை பொருட்கள், வேர்க்கடலை உட்பட சில வகை கடலைகள், பப்பாளி, ஊறுகாய், சாஸ், இனிப்பு வகைகள் போன்றவையும் மைக்ரேன் தலைவலியை தூண்டும். இந்த உணவுகளில் ஏதாவது ஒன்று அலர்ஜியை ஏற்படுத்தினாலும், சம்பந்தப் பட்டவருக்கு மைக்ரேன் வரும் எனவே இவற்றை தவிர்க்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பரம்பரை நோய்

பரம்பரையாக வரும் பாதிப்புகளில் இதுவும் ஒன்று. அப்பா, அம்மாவில் யாருக்காவது இருந்தாலோ, தாத்தா, பாட்டிக்கு இருந்தாலோ வாரிசுகளில் யாருக்காவது வரும். குழந்தைகளுக்கு வருமா என்று கேட்கலாம்; நிச்சயமாக வரும். ஆனால், சில நிமிடங்களில் போய்விடும். அதனால் தான், சில குழந்தைகளுக்கு வாந்தி வருகிறது; லைட்டை பார்த்தாலே கண் கூசுகிறது. இளைய வயதில் மைக்ரேன் வர வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சிகிச்சை பெற வேண்டும்.

திராட்சை பழ பரசம்

பெரும்பாலான மைக்ரேன் தலைவலிகளுக்கு சிகிச்சை தேவையில்லை. உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வந்தாலே போதும். தொடர்ந்து தலைவலி வந்தால், அதை தடுக்க யோகா பயிற்சி செய்வது நல்லது. எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை விழுங்குவதை தவிர்க்க வேண்டும்.

தலைவலிக்கும் நேரத்தில் நன்கு பழுத்த கறுப்பு திராட்சைகளை மிக்சியில் போட்டு அடித்து சாறு பிழிந்து அதை பருகவேண்டும். இது ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் தரும்.

வைட்டமின் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவதன் மூலம் மைக்ரேன் வராமல் தடுக்க முடியும். மீன்கள், பச்சைக் காய்கறிகள், கோதுமை, உலர் பழங்கள், கொட்டைகள் போன்றவை உட்கொள்ளலாம்.

தலைவலிக்கும் போது வெள்ளரிக்காய் ஜூஸ் பருகலாம். காரட் ஜூஸ் ஒற்றைத் தலைவலிக்கு அருமருந்து.
Disqus Comments