.

Saturday, April 12, 2014

இளநரை காரணமும் தீர்வும்


எமது தலை முடி வெளிப்படையாகப் பார்க்கும் போது நல்ல கருமையாகத்தான் இருக்கும். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இளநரை ஏற்படுகின்றது.

இதைத் தடுப்பதற்கு வழி என்ன? முடி நரைப்பது ஏன்? என்பது பற்றி பலருக்கு தெரியாது போகின்றது.

எமது முடியின் வளர்ச்சியானது படிப்படியாக நடக்கிறது. எல்லா முடியும் ஒரே நேரத்தில் ஒரே வீச்சில் வளரும் என்றில்லை. சில முனைகளிலுள்ள முடிகள் வளராது, வேறு சில ஓய்விலும் இருக்கும். சில முடிகள் உதிரும். ஓய்வில் இருந்தவை வளரும்.

எமது சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களிலிருந்து வளர்கிறது. அங்குதான் முடிக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும் மெலனின் என்ற சாயம் உள்ளது.

அதில் மெலனின் உற்பத்தி நின்றுவிட்டால் அந்த வேரிலிருந்து வளரும் முடிக்கு கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும்.
ஆனால் அதேநேரம் வேறு முளைகளிலிருந்து கருமையான முடி வளரக்கூடும்.

படிப்படியாக ஏனைய முளை வேர்களிலும் மெலனின் உற்பத்தி அற்றுப் போக வெண் முடிகள் அதிகரிக்கும்.

மருத்துவ ரீதியாக 40 வயதிற்கு உட்பட்ட ஒருவரது தலைமுடிகளில் பாதிக்கு மேல் வெண்மை அடைந்தாலே அதனை இளநரை என்பார்கள்.

இளநரைக்குக் காரணம் என்ன? 

பொதுவாக இது பரம்பரை சம்பந்தமானது. உங்கள் இரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத் தலையினர் எனின் உங்கள் முடியும் பெரும்பாலும் அந்தத் திசையிலேயே செல்ல நேரிடும்.

தலைமுடி வேகமாக வளர்கின்ற காரணத்தால் அதுவே முதலில் நரைக்கத் தொடங்கும். உடல் முடிகள் நரைக்கச் சற்றுக் காலம் செல்லும்.

மருத்துவக் குறிப்புக்கள் – தலையில் பொடுகு அதிகம் தோன்றினால், அவை வேர்க்கால்களை அடைத்து, மெலனின் உற்பத்தியை குறைத்து, நரையை அதிகப்படுத்துகின்றன.

தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும், சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசிகளிலுள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு, வேர்க் கால்களை சேதமடையச் செய்து, கறுப்பு நிறமிகளை அழித்து, நரைமுடிகளை அதிகப்படுத்துகின்றன.

புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து குறைவினால், முடியின் கறுமை நிறம் மங்கி, செம்பட்டை நிறம் தோன்றுகிறது. நாளடைவில் இதுவே, நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு, பி.சி.எல்., என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக, அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்களை விட ஆண்களுக்கே, முடி மிக கறுப்பாக காணப்படுகிறது. கரும்பூலாவின் குணம்முடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா.

இந்தச் செடியின் இலைகள் மற்றும் பழங்களில் உள்ள குளோஜிடோனால், பிட்டுலின் மற்றும் பிரிடெலின் வேதிப்பொருட்கள், நரைமுடிகளுக்கு காரணமான மெலனின் அழிவை தடுத்து, கறுப்பு நிறத்தைக் கூட்டி, இளநரை ஏற்படாமல் தடுக்கின்றன.

கரும்பூலா பழம் மற்றும் இலைகள், நெல்லிக்காய், மருதோன்றி இலைகள், கறிவேப்பிலை இலைகள், அலரி இலைகள் ஆகியவற்றை இடித்து, 500 மி.லி சாறெடுத்துக் கொள்ள வேண்டும்.

கடுக்காய் தோலை, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 500 மி.லி, தேங்காய் எண்ணெயுடன் சாறு மற்றும் கடுக்காய் தோல் பொடியை கலந்து, கொதிக்க வைத்து, சாறு வற்றியதும் வடிகட்டி, சூடு ஆறியபின், மூடிய பாத்திரத்தில் எடுத்து வைத்து, 15 நாட்கள் சென்றதும், மீண்டும் ஒருமுறை வடிகட்டி, தலையில் தேய்த்து வர, நரைமுடி வராமல் தடுக்கும் மற்றும் இளநரை மாறும்.

Disqus Comments