தற்போது நிறைய பெண்கள் சுகப்பிரசவத்திற்கு பயந்து சிசேரியன் செய்து கொள்கின்றனர். ஆனால் சிசேரியன் பிரசவத்தினால் பல நாட்கள் வலியை அனுபவிக்கக்கூடும் என்பது பல பெண்களுக்கு தெரியவில்லை. அதுவே சுகப்பிரசவம் என்றால் பிரசவ நேரத்தில் மட்டும் தான் வலியை அனுபவிப்போம். எனவே பெண்களே சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்வதை விட, சுகப்பிரசவத்தை மேற்கொள்ளுங்கள்.
அதிலும் இந்த சுகப்பிரசவம் எளிமையாக நடப்பதற்கு ஒருசிலவற்றை கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து பின்பற்றினால், நிச்சயம் சுகப்பிரசவம் சுகமாக நடைபெறும். இங்கு சுகப்பிரசவம் எளிமையாக நடப்பதற்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம்.
உடற்பயிற்சி
கர்ப்பிணிகள் தினமும் எளிமையான உடற்பயிற்சிகளான நடைப்பயிற்சி, நீச்சல் போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இது சுகப்பிரசவத்தை எளிமையாக்கும்.
யோகா
பிரசவத்திற்கு முன் செய்யக்கூடிய யோகாக்களை கர்ப்பிணிகள் அன்றாடம் செய்து வந்தாலும், சுகப்பிரசவம் ஈஸியாக நடைபெறும்.
மனதளவில் அமைதியாக இருக்கவும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் பல்வேறு மனநிலைக்கு ஆளாகக்கூடும். கர்ப்பிணிகள் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டால், அது குழந்தையையோ அல்லது சுகப்பிரசவத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் மனதை எப்போதும் அமைதியாகவும் கூலாகவும் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
சரியான டயட்
சுகப்பிரசவம் எளிமையாக நடப்பதற்கு உண்ணும் உணவுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்தை தரும் மற்றும் சுகப்பிரசவத்தை எளிமையாக்கும் உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வர வேண்டும்.
தண்ணீர் குடிக்கவும்
குழந்தை ஆரோக்கியமாக இருக்கவும், சுகப்பிரசவம் நடைபெறவும், கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீரை தவறாமல் குடித்து வர வேண்டும்.
அனுபவமுள்ள நபர்
பெண்கள் சுகப்பிரசவத்திற்கு பயந்து சிசேரியன் மேற்கொள்கிறார்கள். ஆகவே அத்தகைய பயத்தைப் போக்குவதற்கு அனுபவமுள்ள அம்மா அல்லது மாமியாரை அருகில் வைத்து அவர்களுடன் பேசி வந்தால், சுகப்பிரசவத்தைப் பற்றிய பயம் நீங்கி, ஒரு தைரியம் கிட்டும். இப்படி தைரியம் கிடைத்தாலே, சுகப்பிரசவம் சுகமாக நடைபெறும்.
மாத்திரைகளை தவிர்க்கவும்
சில நேரங்களில் சுகப்பிரசவம் நடைபெறுவதற்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்படும். ஆனால் அப்படி சுகப்பிரசவம் நடைபெறுவதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அது உடலை பாதிக்கும். எனவே இதனை அறவே தவிர்த்துவிட வேண்டும்.
பிரசவத்திற்கு முந்தைய வகுப்புகள்
முதன்முறையாக கருத்தரித்து இருப்பவர்கள், சுகப்பிரசவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வகுப்புகள் செல்லாம். இப்படி செல்வதால், சுகப்பிரசவத்தை மேற்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பனவற்றை தெரிந்து கொள்ளலாம்.
சரியான பரிசோதைனை
சுகப்பிரசவத்தை பல்வேறு செயல்கள் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சரியான பரிசோதனை மருத்துவரிடம் சென்று சோதித்து பார்த்தால், உடல் நிலையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை ஏதாவது பிரச்சனை இருந்தால், அதனை முன்பே தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள முடியும்.
உங்களுடன் நீங்களே பேசுங்கள்
சுகப்பிரசவத்திற்கு உடலானது அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமானால், அதற்கு முதலில் நீங்கள் மனதளவில் தைரியமாகி, என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே உங்களுக்கு சொல்ல வேண்டும்.