.

Thursday, April 3, 2014

கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவும்


 பொதுவான குணம் 

கண்டங்கத்திரி அனைத்து வகை நிலங்களிலும் நன்கு வளரும். முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீல நிற மலர்களையும் சிறு கத்திரிக்காய் வடிவிலான உருண்டையான காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறு செடியினம். தமிழகத்தில் எல்லாமாவட்டங்களிலும் தரிசு நிலங்களில் வளர்கிறது.

நிலத்தினை நன்கு உழுது விதைப்புக்குத் தயாராக வைக்க வேண்டும். வேண்டிய தொழு உரம் போடவேண்டும். நேரடி விதைப்புக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும். நாற்று விட்டு ஒரு மாதத்தில் அடிக்கு அடி இடைவெளியில் நட்டு உயிர் தண்ணீர் பாச்சவேண்டும். பின் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்தால் போதும். 60 நாட்கள் கழித்துக் களை எடுக்க வேண்டும். ஒரு வருடகாலம் முடந்து ஒரே அறுவடையாகச்செய்யவேண்டும். செடி 3750 கிலோ காய் 500 கிலோ கிடைக்கும். பூச்சி நோய் காய் புழு மட்டும் தாக்கலாம். அதற்கு உரிய மருந்து அடிக்க வேண்டும். 

பறித்த பழங்களை நாட்கள் காய வைக்க வேண்டும். பின் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இதன் சாறு இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய வல்லது. இதில் உள்ள ஆல்கலாய்டுகள் ஆராயச்சி செய்து கொண்டுள்ளார்கள். இது கோழையகற்றியாகவும்சிறுநீர் பெருக்கியாகவும்,குடல் வாயு அகற்றியாகவும் செயற்படும்.

வேறுபெயர்கள்
ஆங்கிலப் பெயர் SOLANUM SURATTENSE தாவரக்குடும்பம் -: SOLANACEAE

மருத்துவக் குணங்கள்

கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது. ஆஸ்துமாவிற்கு இச்செடியினை பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது. காரணமில்லாத வரட்டு இருமலுக்கும் இது நல்லதொரு மருந்து. கீல் வாதம்மார்சளிவியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.

வேர் 30 கிராம்சுக்கு கிராம்சீரகம் சிட்டிகைகொத்தமல்லி பிடி ஆகியவற்றை லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காச்சி முதல் 6முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதளக்காச்சல்சளிக்காய்ச்சல்நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.
சமூலம் பிடிஆடாதொடை பிடிவிஷ்ணுகாந்தி பற்படாகம் இரண்டும் 1பிடிசீரகம்சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து லிட்டர் நீரில் போட்டு அரைலிட்டராக்கி 4 முதல் முறை 100 மி.லி. வீதம் சாப்பிட புளு சுரம்,நிமோனியா சுரம்மண்டை நீர் ஏற்றக் காயச்சல் முதலியன தீரும்.

(கண்டங்கத்திரி குடி நீர்)கண்டங்கத்திரி வேர்ஆடாதொடை வேர் வகைக்கு40 கிராம் அரிசிதிப்பிலி கிராம் சிதைத்து லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி.வீதம் தினம் வேளை குடிக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி (க்ஷயம் ) ஈளைஇருமல்கப இருமல்பீனிசம் தீரும்.
பழத்தை உலர்த்தி நெருபிலிட்டு வாயில் புகைப் படிக்க பல் வலிபல் அரணை தீரும்.

வெப்பமுங் கார்ப்பு முள்ள கண்டங்கத்திரியினால் காசம்சுவாசம்ஷயம்,அக்கினி மந்தம்தீச்சுரம்சந்நி பாதம் ஏழுவகைத் தோஷங்கள்வாத ரோகம் ஆகியவை போகும்.

கண்டங்கத்திரியின் வேர்இலைபூகாய்பழம்விதைபட்டை இவற்றால் நீரேற்றம்சலப்பீநசம்ஈளைசுவாசம் இவை போகும்

வெண் மணலிலுண்டாகின்ற கண்டங்கத்திரிக்காயால் சிலேத்தும நோய் தீரும். சீதம் கலந்த மலமும் பசியும் உண்டாம்.

கண்டங்கத்திரிப் பழம் இருமல்இரைப்புசயம்கபம்பல்லரணைபுடை நமைச்சல் இவற்றை நீக்கும். பலத்தையும் பசியையும் உண்டாக்கும்.
Disqus Comments